Set as Homepage|Add to Favorites
 

பல பயனர் செய்தி இயந்திரம்,
சொந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது
இணையத்தில் மீடியா மற்றும் வலைப்பதிவுகள்.

 
Thatstamil.Codewarehouses.com » வணிகம் » ஜூன் 15-இல் கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் திறப்பு
For advertising

ஜூன் 15-இல் கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் திறப்பு

Author: nithya at 14-06-2016, 11:38
ஜூன் 15-இல் கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் திறப்பு

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் ஜூன் 15-ஆம் தேதி திறக்கப்படும் என்று நாகை மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

தமிழக தென்னை விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்யும் வகையில், கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, நாகை மாவட்டம், வேதாரண்யம் வட்ட வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கம் மூலம் கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் ஜூன் 15-ஆம் தேதி திறக்கப்படவுள்ளது.

ஒரு கிலோ ஆலை கொப்பரை ரூ. 59.5 என்ற விலையிலும், முழு கொப்பரை ரூ. 62.4 என்ற விலையிலும் கொள்முதல் நிலையங்களில் கொப்பரை தேங்காய்கள் கொள்முதல் செய்யப்படும்.

ஏற்கெனவே வேளாண் துறையின் அடையாள அட்டைப் பெற்றுள்ள தென்னை விவசாயிகள் தங்கள் அடையாள அட்டை உடனடியாக புதுப்பித்துக் கொள்ளலாம். இத்திட்டத்தில் புதிதாக சேர விரும்பும் தென்னை விவசாயிகள், வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பதிவுப் பெற்று அடையாள அட்டை பெறலாம் என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Dear visitor, you went to website as unregistered user.
We encourage you to Register or Login to website under your name.

Comments:

Add Comments