Set as Homepage|Add to Favorites
 

பல பயனர் செய்தி இயந்திரம்,
சொந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது
இணையத்தில் மீடியா மற்றும் வலைப்பதிவுகள்.

 
Thatstamil.Codewarehouses.com » வணிகம் » பாசுமதி அரிசி ஏற்றுமதியில் ரூ.1,000 கோடி ஊழல்: அமலாக்கத் துறை விசாரிக்க உத்தரவு
For advertising

பாசுமதி அரிசி ஏற்றுமதியில் ரூ.1,000 கோடி ஊழல்: அமலாக்கத் துறை விசாரிக்க உத்தரவு

Author: nithya at 14-06-2016, 11:40
பாசுமதி அரிசி ஏற்றுமதியில் ரூ.1,000 கோடி ஊழல்: அமலாக்கத் துறை விசாரிக்க உத்தரவு

ரூ.1,000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்த பாசுமதி அரிசி ஏற்றுமதி ஊழல் குறித்து அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.

கடந்த 2014–15–ம் ஆண்டு காலத்தில் 2 லட்சம் மெட்ரிக் டன் அளவிலான பாசுமதி அரிசி சட்டவிரோதமாக துபாய்க்கு ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளதை மத்திய வருவாய் புலனாய்வு இயக்குனரகம் கண்டுபிடித்தது.

குஜராத்தின் கண்ட்லா துறைமுகத்தில் இருந்து ஈரானுக்கு செல்லும் வழியில் நடுக்கடலில் வைத்து இந்த பாசுமதி அரிசி துபாய்க்கு திருப்பி விடப்பட்டு வந்துள்ளது. இந்த முறைகேட்டு ஏற்றுமதி மூலம் ரூ.1,000 கோடிக்கு மேல் ஊழல் நடந்திருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
சிறப்பு புலனாய்வுக்குழு

குஜராத் மற்றும் அரியானாவை சேர்ந்த சுமார் 25 பெரும் ஏற்றுமதியாளர்கள் இந்த முறைகேட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டு, தற்போது அவர்கள் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளனர்.

இந்த ஊழல் தொடர்பான விவரங்களை மத்திய நிதித்துறை இணை மந்திரி ஜெயந்த் சின்கா சமீபத்தில் பாராளுமன்றத்தில் எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்து இருந்தார். இந்த ஊழல் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டு அமைத்து உள்ளது.
நீதிபதி எம்.பி.ஷா

சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி எம்.பி.ஷா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவே, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி உள்ள கருப்பு பணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறது.

பாசுமதி அரிசி ஏற்றுமதி ஊழலை கண்டறிந்த மத்திய வருவாய் புலனாய்வு இயக்குனரகம், இந்த ஊழல் தொடர்பான அனைத்து தகவல்களையும் சிறப்பு புலனாய்வுக்குழுவிடம் அளித்து உள்ளது. அதன் அடிப்படையில் இந்த ஊழல் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
நிதி மோசடி

இந்த நிலையில் பாசுமதி அரிசி ஏற்றுமதி ஊழலில் நடந்துள்ள நிதிமோசடி மற்றும் இதனால் பயனடைந்தவர்கள் குறித்து விசாரணை நடத்துமாறு அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறையை சிறப்பு புலனாய்வுக்குழு கேட்டுக்கொண்டது.

அதன்படி இந்த ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் விரைவில் விசாரணையை தொடங்குவார்கள் என கூறப்படுகிறது.
Dear visitor, you went to website as unregistered user.
We encourage you to Register or Login to website under your name.

Comments:

Add Comments