Set as Homepage|Add to Favorites
 

பல பயனர் செய்தி இயந்திரம்,
சொந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது
இணையத்தில் மீடியா மற்றும் வலைப்பதிவுகள்.

 
Thatstamil.Codewarehouses.com » வணிகம் » புதுகை மாவட்டத்தில் முத்து விளையும் முத்துக்குடா?
For advertising

புதுகை மாவட்டத்தில் முத்து விளையும் முத்துக்குடா?

Author: nithya at 14-06-2016, 11:42
புதுக்கோட்டை மாவட்ட கடலோர கிராமமான முத்துக்குடாவில் முத்து கிடைப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக அப்பகுதியில் கள ஆய்வு மேற்கொண்ட புதுகை அரசு மன்னர் கல்லூரி பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோயில் வட்டத்தில் முத்துக்குடா என்ற கடற்கரை கிராமம் உள்ளது. இந்த ஊரின் பெயருக்கு ஏற்றாற்போல, இங்கு முத்து விளைந்ததற்கான தொல்லியல் சான்றுகள் கிடைக்கின்றனவா என்பதை ஆய்வுசெய்யும் நோக்கில் புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரி வரலாற்றுத் துறைப் பேராசிரியர் முனைவர் அ. சந்திரபோஸ், அத்துறையின் ஆய்வு மாணவர்கள் எஸ். பவுல்சிங், எஸ். மணிகண்டன் ஆகியோர் முத்துக்குடா பகுதியில் அண்மையில் கள ஆய்வு மேற்கொண்டனர்.

இதுகுறித்து பேராசிரியர் அ. சந்திரபோஸ் கூறியது:

ஆவுடையார்கோவில் வட்டம், நாட்டானிபுரசகுடி வருவாய் கிராமத்துக்கு உள்பட்ட பகுதி முத்துக்குடா. இப்பகுதி மீனவர்களிடம் பேசியபோது, முற்காலத்தில் முத்து விளைந்ததால் இப்பெயர் உருவானதாக முன்னோர் கூறியதாகவும், ஆனால், தற்போது முத்து விளைச்சல் இல்லை என்றும் கூறினர்.

இதைத்தொடர்ந்து, முத்துக்குடா அருகேயுள்ள பாம்பாற்றில் தொல்லியல் சான்றுகள் ஏதேனும் கிடைக்கின்றனவா என்பதை அறிய கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள அரசன்கரை என்ற இடத்தில் பாம்பாற்றுக்குள் இறங்கி அரசங்கரை பழம்பதிநாதர் கோயிலைக் கடந்து சுமார் 1 கி.மீ. தொலைவுக்கு நடந்து சென்றோம். அப்போது வழியில் இருந்த சவுக்குத் தோப்புக்குள் சென்றபோது, அங்கு வெள்ளை நிறத்தில் சிப்பிகள் சிதறிக்கிடந்ததைப் பார்த்தோம். அவற்றை ஆய்வு செய்த போது, அவை முத்துச் சிப்பிகள் எனத் தெரியவந்தது.

சுமார் 150 முத்துச் சிப்பிகள் வரை கிடந்தன. ஓரிரு நாட்களுக்கு முன்புதான் நெருப்பில் வாட்டி சிப்பியை உடைத்து முத்துக்களை எடுத்திருப்பது தெரியவந்தது. சிதறிக்கிடந்த சிப்பிகள் ஈரத்தன்மை மாறாததாகவும், அதனால் அவை அதிக எடை உடையனவாகவும் இருந்தன. யாரோ ரகசியமாக முத்துக்களைப் பிரித்து எடுத்துச் சென்றிருக்கலாம்.

முத்துக்குடாவில் முத்து விளைவது அழிந்துபோய்விட்டதாக பலரும் நம்பியுள்ள நிலையில், உடைக்கப்பட்டுக் கிடந்த சிப்பிகளைப் பார்த்தப் பிறகு, இங்கு தொடர்ந்து முத்து விளைவதை அறியமுடிந்தது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முத்துக்குடாவில் முத்துச்சிப்பி விளைவது குறித்தத் தகவல் தொல்லறிவியல் ஆய்வாளர்களுக்கு பயனுள்ளதாக அமையும். முத்துக்குடாவில் அலையாத்திக்காடுகள் உள்ள இடத்தில் இந்த முத்துகள் அதிக அளவில் விளையும் வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

எனவே, தமிழக அரசு முத்துக்குடாவை ஒரு நல்ல முத்து விளையும் இடமாக மாற்ற நடவடிக்கை எடுத்தால் நாட்டுக்கும், அப்பகுதி மக்களுக்கும் பயனுள்ள வகையில் அமையும் என்றார் அவர்.
Dear visitor, you went to website as unregistered user.
We encourage you to Register or Login to website under your name.

Comments:

Add Comments