Set as Homepage|Add to Favorites
 

பல பயனர் செய்தி இயந்திரம்,
சொந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது
இணையத்தில் மீடியா மற்றும் வலைப்பதிவுகள்.

 
Thatstamil.Codewarehouses.com » சினிமா » திருப்பதி கோவிலில் ஒரே நாளில் தெண்டுல்கர், சிரஞ்சீவி, நாகார்ஜுனா தரிசனம்
For advertising

திருப்பதி கோவிலில் ஒரே நாளில் தெண்டுல்கர், சிரஞ்சீவி, நாகார்ஜுனா தரிசனம்

Author: nithya at 1-06-2016, 12:00
திருப்பதி கோவிலில் ஒரே நாளில் தெண்டுல்கர், சிரஞ்சீவி, நாகார்ஜுனா தரிசனம்


கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் தனது மனைவி அஞ்சலியுடன் நேற்று இரவு திருப்பதிக்கு வந்தார்.

மும்பையில் இருந்து விமானம் மூலம் திருப்பதி வந்த அவர் அங்கிருந்து கார் மூலம் திருமலைக்கு சென்றார். அங்குள்ள ஸ்ரீகிருஷ்ண விருந்தினர் மாளிகையில் தங்கினார்.

அதேபோல் ஐதராபாத்தில் இருந்து நடிகர்கள் சிரஞ்சீவி, நாகார்ஜுனா, தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் ஆகியோரும் நேற்று இரவு திருமலைக்கு வந்தனர். அவர்களும் ஸ்ரீகிருஷ்ணா விருந்தினர் மாளிகையில் தங்கினர்.

அதே விருந்தினர் மாளிகையில் தெண்டுல்கர் தங்கி இருக்கும் தகவல் சிரஞ்சீவி, நாகார்ஜூனா மற்றும் அல்லு அரவிந்துக்கு தெரிய வந்தது.

இதையடுத்து அவர்கள் தெண்டுல்கர் தங்கியிருந்த அறைக்கு சென்று சந்தித்து பேசினர். தெண்டுல்கருடன் அவர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

இன்று காலையில் நடிகர்கள் சிரஞ்சீவி, நாகார்ஜுனா, அல்லு அரவிந்த் ஆகியோர் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தனர். அவர்களுக்கு கோவில் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதேபோல் சச்சின் தெண்டுல்கரும், ஏழுமலையானை தரிசனம் செய்தார்.
Dear visitor, you went to website as unregistered user.
We encourage you to Register or Login to website under your name.

Comments:

Add Comments