Set as Homepage|Add to Favorites
 

பல பயனர் செய்தி இயந்திரம்,
சொந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது
இணையத்தில் மீடியா மற்றும் வலைப்பதிவுகள்.

 
Thatstamil.Codewarehouses.com » சினிமா » சினிமா தயாரிப்பாளர் ஆபாவாணனுக்கு 5 ஆண்டு ஜெயில்
For advertising

சினிமா தயாரிப்பாளர் ஆபாவாணனுக்கு 5 ஆண்டு ஜெயில்

Author: nithya at 1-06-2016, 12:07
சினிமா தயாரிப்பாளர் ஆபாவாணனுக்கு 5 ஆண்டு ஜெயில்

தமிழ் திரையுலகில் ஊமை விழிகள் என்ற சினிமா படத்தை எடுத்தவர் ஆபாவாணன். திரைப்படக்கல்லூரி மாணவராக எடுத்த அந்தப்படம் மிகுந்த பரபரப்புடன் பேசப்பட்டது. அது தவிர, ‘உழவன் மகன், செந்தூரப்பூவே’ உள்பட பல்வேறு படங்களை அவர் தயாரித்தார்.

சென்னையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் கதீட்ரல் சாலை கிளையில் ஆபாவாணன் கணக்கு வைத்திருந்தார். கடந்த 1999-ம் ஆண்டு வங்கிக் கணக்கை அவர் தொடங்கினார். இந்த வங்கியிலிருந்து 69 காசோலைகளை ஆபாவாணன் வாங்கியிருந்தார்.


அவற்றில் 44 காசோலைகளில் முறைகேடு செய்யப்பட்டது. இதனால் அந்த வங்கிக்கு ரூ.2 கோடியே 34 லட்சத்து 60 ஆயிரம் நஷ்டம் ஏற்பட்டது. இதில் வங்கி அதிகாரிகளும் சேர்ந்து முறைகேடு செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக ஆபாவாணன் மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கியின் மேலாளர் கே.ராஜகோபாலன், உதவி மேலாளர் டி.எஸ்.ராமானுஜம், மண்டல துணை மேலாளர் எச்.பி.சுப்ரமணியம், ஆபாவாணனின் மனைவி தேன்மொழி ஆகியோர் மீது சி.பி.ஐ. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆபாவாணன் 4-வது நபராக குற்றம்சாட்டப்பட்டு இருந்தார்.

வங்கி விதிகளையும், நடைமுறைகளையும் மீறி, ஆபாவாணன் மற்றும் அவரது மனைவி லாபமடையும்படி வங்கி அதிகாரிகள் நடந்துகொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கை சென்னை 11-வது கூடுதல் சிறப்பு சி.பி.ஐ. கோர்ட்டு விசாரித்தது. இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி கே.வெங்கடசாமி நேற்று வழங்கினார். ஆபாவாணனுக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.2.40 கோடி அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

ராஜகோபாலனுக்கு 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ரூ.15 லட்சம் அபராதமும், ராமானுஜத்துக்கு 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் ரூ.10 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

வழக்கில் சிக்கியிருந்த சுப்ரமணியம், ஆபாவாணனின் மனைவி தேன்மொழி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.
Dear visitor, you went to website as unregistered user.
We encourage you to Register or Login to website under your name.

Comments:

Add Comments