Set as Homepage|Add to Favorites
 

பல பயனர் செய்தி இயந்திரம்,
சொந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது
இணையத்தில் மீடியா மற்றும் வலைப்பதிவுகள்.

 
Thatstamil.Codewarehouses.com » இந்தியா » பிரதமர் நரேந்திர மோடியுடன் ஜெயலலிதா 14-ந் தேதி சந்திப்பு
For advertising

பிரதமர் நரேந்திர மோடியுடன் ஜெயலலிதா 14-ந் தேதி சந்திப்பு

Author: nithya at 4-06-2016, 09:07
பிரதமர் நரேந்திர மோடியுடன் ஜெயலலிதா 14-ந் தேதி சந்திப்பு

பிரதமர் நரேந்திர மோடியை முதல்-அமைச்சர் ஜெயலலிதா டெல்லியில் 14-ந் தேதி சந்திப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அ.தி.மு.க. வெற்றி பெற்றதற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் நரேந்திரமோடியை சந்திப்பதற்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா தரப்பில் இருந்து தேதி கேட்டு கடிதம் அனுப்பியதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, 14-ந் தேதியன்று மாலையில் சந்திக்கலாம் என்று நேரம் ஒதுக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சந்திப்பின் போது தமிழகத்துக்கு மத்திய அரசு தர வேண்டிய நிதி, மக்கள் நலத் திட்டங்களுக்காக ஒதுக்க வேண்டிய நிதி உட்பட பல்வேறு கோரிக்கைகளை பிரதமரிடம் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வைப்பார் என்று தலைமை செயலக வட்டாரம் தெரிவிக்கிறது.
Dear visitor, you went to website as unregistered user.
We encourage you to Register or Login to website under your name.

Comments:

Add Comments