Set as Homepage|Add to Favorites
 

பல பயனர் செய்தி இயந்திரம்,
சொந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது
இணையத்தில் மீடியா மற்றும் வலைப்பதிவுகள்.

 
Thatstamil.Codewarehouses.com » இந்தியா » அடுத்த மாதம் முதல் வாரத்தில் மத்திய அமைச்சரவை மாற்றியமைக்க பிரதமர் திட்டமிட்டு வருவதாக பாரதிய ஜனதா கட்சி வட்டாரங்கள் தகவல் : புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்க பரிசீலனை
For advertising

அடுத்த மாதம் முதல் வாரத்தில் மத்திய அமைச்சரவை மாற்றியமைக்க பிரதமர் திட்டமிட்டு வருவதாக பாரதிய ஜனதா கட்சி வட்டாரங்கள் தகவல் : புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்க பரிசீலனை

Author: nithya at 28-05-2016, 21:40
அடுத்த மாதம் முதல் வாரத்தில் மத்திய அமைச்சரவை மாற்றியமைக்க பிரதமர் திட்டமிட்டு வருவதாக பாரதிய ஜனதா கட்சி வட்டாரங்கள் தகவல் : புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்க பரிசீலனை

மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றியமைக்கப்படவுள்ளதாக பாரதிய ஜனதா கட்சி தலைவர் திரு. அமித் ஷா தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் முதல் வாரத்தில் இந்த மாற்றம் செய்யப்படலாம் என பாரதிய ஜனதா கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் மத்தியில் பாரதிய ஜனதா கட்சி அரசு ஆட்சிப்பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்து, 3-ம் ஆண்டு தொடங்கியுள்ளது. இந்நிலையில், தனது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள சில அமைச்சர்களின் செயல்பாடு குறித்து பிரதமர் அதிருப்தி கொண்டுள்ளதாகவும், விரைவில் மத்திய அமைச்சரவையில் மாற்றம் வரும் என்றும் டெல்லி வட்டாரத் தகவல்கள் வெளியாகின. இதனை உறுதிப்படுத்தும் வகையில், மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றியமைக்கப்படவுள்ளதாகவும், சில புதுமுகங்கள் அமைச்சரவையில் இடம்பெறுவார்கள் என்றும் பாரதிய ஜனதா கட்சி தலைவர் திரு. அமித் ஷா தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சரவையில், விளையாட்டுத்துறை இணையமைச்சராக பொறுப்பு வகித்த திரு. சர்பானந்த் சோனோவால், அஸ்ஸாம் மாநில முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டதை அடுத்து, மத்திய அமைச்சரவையில் அந்த பதவி காலியாக உள்ளது. அடுத்த மாதம் முதல் வாரத்தில் மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படக்கூடும் என்றும், திரு. அருண் ஜெட்லி, திரு. ராஜ்நாத்சிங், திருமதி சுஷ்மா ஸ்வராஜ், திரு. நிதின் கட்காரி உள்ளிட்ட மூத்த அமைச்சர்களின் பதவிக்கு ஆபத்து இல்லை என்றும் பாரதிய ஜனதா கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
Dear visitor, you went to website as unregistered user.
We encourage you to Register or Login to website under your name.

Comments:

Add Comments