Set as Homepage|Add to Favorites
 

பல பயனர் செய்தி இயந்திரம்,
சொந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது
இணையத்தில் மீடியா மற்றும் வலைப்பதிவுகள்.

 
Thatstamil.Codewarehouses.com » இந்தியா » ஜிஎஸ்டி மசோதாவை தாக்கல் செய்ய மம்தா பானர்ஜி ஆதரவு
For advertising

ஜிஎஸ்டி மசோதாவை தாக்கல் செய்ய மம்தா பானர்ஜி ஆதரவு

Author: nithya at 8-06-2016, 19:31
ஜிஎஸ்டி மசோதாவை தாக்கல் செய்ய மம்தா பானர்ஜி ஆதரவு

ஜிஎஸ்டி மசோதா விவகாரத்தில் மோடி அரசுக்கு நிவாரணமாக மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்து உள்ளார்.

சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை கடந்த பாராளுமன்ற கூட்ட தொடரில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நிறைவேற்ற முயன்றது. ஆனாலும், டெல்லி மேல்–சபையில் பாரதீய ஜனதாவுக்கு பெரும்பான்மை பலம் இல்லாத காரணத்தால், அந்த மசோதா நிறைவேறுவதில் தொடர்ந்து முட்டுக்கட்டை நீடிக்கிறது. இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் கட்சி பலத்த எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவை வரி மசோதாவை நிறைவேற்றி விட வேண்டும் என்று மத்திய அரசு விரும்புவதும் ஆனால் ஏமாற்றமே மிஞ்சுவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் ஜிஎஸ்.டி மசோதா விவகாரத்தில் மத்தியில் உள்ள மோடி அரசுக்கு சற்று நிவாரணமாக மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்து உள்ளார். மழைக்கால கூட்டத்தொடரில் ஜிஎஸ்டி மசோதாவை தாக்கல் செய்வதை உறுதிசெய்ய மேற்கு வங்காள மாநில நிதிமந்திரியாக உள்ள அமித் மித்ராவிற்கு மம்தா உத்தரவிட்டு உள்ளார். அமித் மித்ரா மாநில நிதியமைச்சர்களின் அதிகாரம் பெற்ற குழுவுக்கான தலைவராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொல்கத்தாவில் தொழில் அதிபர்கள் கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, “அரசியல் ரீதியாக நான் பாரதீய ஜனதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றேன். ஆனால் இதனுடைய பொருள் மக்களுக்கு சாதகமான மசோதாவை தடைசெய்வது என்று பொருள் கிடையாது. சில அரசியல் கட்சிகள் தேவையில்லாமல் அரசியல் பழிவாங்கும் மற்றும் மசோதாவை தடைசெய்யும் நடவடிக்கையில் ஈடுபடுவது ஏன்?” என்று கேள்வி எழுப்பினார். ஜிஎஸ்டி நீண்ட காலமாக கிடப்பில் உள்ளது. அடுத்த இரண்டு கூட்டங்களுடன் மசோதா தாக்கல் செய்யப்படுவதை உறுதி செய்யுங்கள். ஒருமித்த கருத்தை உருவாக்க மற்றும் அதனை செய்யவேண்டும்,” என்று மம்தா, மித்ராவிடம் கேட்டுக் கொண்டு உள்ளார்.
Dear visitor, you went to website as unregistered user.
We encourage you to Register or Login to website under your name.

Comments:

Add Comments