Set as Homepage|Add to Favorites
 

பல பயனர் செய்தி இயந்திரம்,
சொந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது
இணையத்தில் மீடியா மற்றும் வலைப்பதிவுகள்.

 
Thatstamil.Codewarehouses.com » இந்தியா » வருகிறது மத்திய அமைச்சரவையில் மாற்றம் : கலக்கத்தில் அமைச்சர்கள்
For advertising

வருகிறது மத்திய அமைச்சரவையில் மாற்றம் : கலக்கத்தில் அமைச்சர்கள்

Author: nithya at 8-06-2016, 19:33
வருகிறது மத்திய அமைச்சரவையில் மாற்றம் : கலக்கத்தில் அமைச்சர்கள்

மத்திய அமைச்சரவையில் விரைவில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில், செயல்படாத அமைச்சர்கள் பலரை மாற்ற பிரதமர் மோடி முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மத்திய அமைச்சர்கள் பலரும் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.

2014ம் ஆண்டு மே 26ம் தேதி மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு பதவியேற்றது. அதன் பிறகு அந்த ஆண்டு நவம்பர் மாதம் சிறிய அளவில் மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது. அதன் பிறகு தற்போது அமைச்சரவையில் மாற்றம் கொண்டு வர மோடி திட்டமிட்டுள்ளார். செயல்படாத அமைச்சர்கள் பலரை மாற்றி விட்டு, புதியவர்களை அமைச்சர்களாக நியமிக்கவும் மோடி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் உத்தர பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட மாநில சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு அம்மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் அளிக்கவும், அசாமில் முதல் முறையாக பா.ஜ., ஆட்சியை பிடித்துள்ளதால் அம்மாநிலத்திற்கு முக்கியத்துவம் தரும் வகையிலும் அமைச்சரவை இடங்களை ஒதுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மோடி தற்போது 5 நாடுகள் பயணத்தில் இருப்பதாலும், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆப்ரிக்க நாடுகளுக்கு சுற்றுப் பயணம் சென்றிருப்பதாலும் அவர்கள் வெளிநாட்டு பயணத்தை முடித்து இந்தியா திரும்பியதும் அமைச்சரவை மாற்றம் நடக்கும் என கூறப்படுகிறது.


ஜூன் 18 அல்லது ஜூன் 29 தேதியில் அமைச்சரவை மாற்றம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய அமைச்சரவை உறுப்பினர்கள் குறித்த பட்டியலும் ஏற்கனவே தயார் செய்யப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.
Dear visitor, you went to website as unregistered user.
We encourage you to Register or Login to website under your name.

Comments:

Add Comments