Set as Homepage|Add to Favorites
 

பல பயனர் செய்தி இயந்திரம்,
சொந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது
இணையத்தில் மீடியா மற்றும் வலைப்பதிவுகள்.

 
Thatstamil.Codewarehouses.com » இந்தியா » கட்டிட பாக்கிக்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது வழக்கு
For advertising

கட்டிட பாக்கிக்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது வழக்கு

Author: nithya at 8-06-2016, 19:37
கட்டிட பாக்கிக்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது வழக்கு

திருவனந்தபுரத்தில் கடந்த 2005-ம் ஆண்டு மாநில காங்கிரஸ் சார்பில் ராஜீவ் காந்தி பெயரில் வளர்ச்சி கல்வி நிறுவனத்துக்கான கட்டிடம் கட்டப்பட்டது. இதை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி திறந்து வைத்தார். அப்போது மாநில காங்கிரஸ் தலைவராக ரமேஷ் சென்னிதாலா இருந் தார்.

இந்த கட்டிட கட்டுமானப் பணியை திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஹீத்தர் கட்டுமான நிறுவனம் மேற்கொண்டது. கட்டிடம் கட்டிய வகையில் இந்த நிறுவனத்துக்கு மாநில காங்கிரஸ் கமிட்டி பாக்கி வைத்து இருந்தது. பலமுறை கேட்டும் பணம் இல்லை என்று காங்கிரஸ் தரப்பில் பதில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, கேரளா முன்னாள் முதல்- மந்திரி உம்மன்சாண்டி, ராஜீவ் கல்வி நிறுவன சேர்மன் ரமேஷ் சென்னிதாலா, மாநில காங்கிரஸ் தலைவர் வி.எம். சுதீரன் ஆகியோர் மீது கட்டுமான நிறுவனத்தின் பங்குதாரர் ராஜீவ் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இது தொடர்பாக பங்கு தாரர் ராஜீவ் சார்பில் சோனியா உள்ளிட்ட 4 பேருக் கும் வக்கீல் பாபுராஜ் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
Dear visitor, you went to website as unregistered user.
We encourage you to Register or Login to website under your name.

Comments:

Add Comments