Set as Homepage|Add to Favorites
 

பல பயனர் செய்தி இயந்திரம்,
சொந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது
இணையத்தில் மீடியா மற்றும் வலைப்பதிவுகள்.

 
Thatstamil.Codewarehouses.com » இந்தியா » மல்லையாவை இந்தியா அழைத்து வரசட்ட நடவடிக்கை: மத்திய அரசு
For advertising

மல்லையாவை இந்தியா அழைத்து வரசட்ட நடவடிக்கை: மத்திய அரசு

Author: nithya at 9-06-2016, 11:21
மல்லையாவை இந்தியா அழைத்து வரசட்ட நடவடிக்கை: மத்திய அரசு

விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அழைத்து வர, அவரை ஒப்படைக்குமாறு பிரிட்டனிடம் கோருவது மட்டும்தான் ஒரே வழி; அதற்கான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் 2 ஆண்டுகால சாதனை விளக்க நிகழ்ச்சி, குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் புதன்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு, மத்திய நிதித் துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா ஆகியோரிடம் விஜய் மல்லையா விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு மத்திய நிதித் துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா அளித்த பதில்:

வங்கிகளில் வாங்கிய கடனை வேண்டுமென்றே திருப்பி செலுத்தாதவர்கள் பட்டியலில் விஜய் மல்லையாவின் பெயர் இடம்பெற்றுள்ளது. அவரை திரும்ப இந்தியாவுக்கு அழைத்து வர, மல்லையாவை ஒப்படைக்கும்படி பிரிட்டனிடம் கோருவது மட்டும்தான் ஒரே வழி. ஆனால், இதுதொடர்பாக அந்த நாட்டில் பின்பற்றப்படும் நடைமுறைகள் சிக்கல் நிறைந்தவையாக உள்ளன. எனவே, விஜய் மல்லையாவை இந்தியா அழைத்து வர தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று ஜெயந்த் சின்ஹா தெரிவித்தார்.
Dear visitor, you went to website as unregistered user.
We encourage you to Register or Login to website under your name.

Comments:

Add Comments