Set as Homepage|Add to Favorites
 

பல பயனர் செய்தி இயந்திரம்,
சொந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது
இணையத்தில் மீடியா மற்றும் வலைப்பதிவுகள்.

 
Thatstamil.Codewarehouses.com » இந்தியா » தீவிரவாதம் கூட்டு முயற்சியால் நிச்சயம் அழிக்கப்பட வேண்டும்: கானாவில் பிரணாப் முகர்ஜி பேச்சு
For advertising

தீவிரவாதம் கூட்டு முயற்சியால் நிச்சயம் அழிக்கப்பட வேண்டும்: கானாவில் பிரணாப் முகர்ஜி பேச்சு

Author: nithya at 13-06-2016, 18:07
தீவிரவாதம் கூட்டு முயற்சியால் நிச்சயம் அழிக்கப்பட வேண்டும்: கானாவில் பிரணாப் முகர்ஜி பேச்சு

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆப்பிரிக்க நாடுகளான கானா, ஐவரி கோஸ்ட், நமீபியா ஆகிய 3 நாடுகளிலும் அரசு முறைப் பயணமாக 6 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். தனது பயணத்தின் முதல் கட்டமாக நேற்று அவர் டெல்லியில் இருந்து கானாவுக்கு புறப்பட்டுச் சென்றார்.

கானா சென்றடைந்த ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை தலைநகர் அக்ராவில் கானா ஜனாதிபதி ஜான் டிராமணி மகமா, துணை ஜனாதிபதி அமிஷா ஆர்தர் ஆகியோர் வரவேற்றனர்.

இந்நிலையில், அதிபர் ஜான் டிராமணி மகாமா ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பிரணாப் முகர்ஜி நேற்று உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

இந்தியா கடந்த 30 வருடங்களாக தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனை எதிர்கொள்ள இந்தியா உங்களுடன் இணைந்து செயல்பட உறுதியாய் உள்ளது.

நாகரீக உலகத்தில் தீவிரவாதம் கூட்டு முயற்சியின் மூலமாக அழிக்கப்பட வேண்டும். தற்போதையை உலகத்திற்கு சர்வதேச நிர்வாக அமைப்புகள் தேவையாய் இருக்கிறது. சர்வதேச சமுதாயத்திற்கு முன்பாக புதிய சவால்கள் இருக்கிறது.

சரியான வாய்ப்புகள் கிடைக்கும்ம் பட்சத்தில் கானாவில் முதலீடு செய்வதில் இந்திய தொழில் துறையினர் மகிழ்ச்சி கொள்வர்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் பேசிய கானா அதிபர் டிராமணி காந்தியை நினைவு கூர்ந்தார். மேலும் கானா முதல் அதிபர் க்வாமே குருமக்கிற்கும், இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவிற்கு இடையில் இருந்த உறவுகளை பற்றி கூறினார். இருவரும் அணிசேரா இயக்கம் உருவாக முக்கிய பங்காற்றியதாக தெரிவித்தார்.
Dear visitor, you went to website as unregistered user.
We encourage you to Register or Login to website under your name.

Comments:

Add Comments