Set as Homepage|Add to Favorites
 

பல பயனர் செய்தி இயந்திரம்,
சொந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது
இணையத்தில் மீடியா மற்றும் வலைப்பதிவுகள்.

 
Thatstamil.Codewarehouses.com » இந்தியா » மேற்கு வங்க முதல்வராக மீண்டும் மம்தா பானர்ஜி நேற்று பதவி ஏற்றுக்கொண்டார்!
For advertising

மேற்கு வங்க முதல்வராக மீண்டும் மம்தா பானர்ஜி நேற்று பதவி ஏற்றுக்கொண்டார்!

Author: nithya at 28-05-2016, 08:23
மேற்கு வங்க முதல்வராக மீண்டும் மம்தா பானர்ஜி நேற்று பதவி ஏற்றுக்கொண்டார்!

தேர்தலில் ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்ட மம்தா பானர்ஜி 42 அமைச்சர்களுடன் நேற்று மேற்கு வங்கத்தின் முதல்வராக மீண்டும் பதவி ஏற்றுக்கொண்டார்.

மேற்கு வங்கத்தில் 6 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைப்பெற்றது. மொத்தம் உள்ள 294 தொகுதிகளில் மம்தா தலைமையிலான கட்சி 211 இடங்களைக் கைப்பற்றியது. ஏற்கனவே ஆட்சியில் இருந்த மம்தா ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டார். இதையடுத்து அம்மாநில ஆளுநர் நேற்று மம்தா பானர்ஜிக்கும்,42 அமைச்சர்களுக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதில் 17 பேர் புதுமுக அமைச்சர்கள் என்பதுக் குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தைப் போலவே அமைச்சர்கள் குழுக்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். இவ்விழாவில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், பீகார் முதல்வர் நிதீஷ் குமார், உத்திரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டவர்கள் கலந்துக்கொண்டனர்..
Dear visitor, you went to website as unregistered user.
We encourage you to Register or Login to website under your name.

Comments:

Add Comments