Set as Homepage|Add to Favorites
 

பல பயனர் செய்தி இயந்திரம்,
சொந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது
இணையத்தில் மீடியா மற்றும் வலைப்பதிவுகள்.

 
Thatstamil.Codewarehouses.com » விளையாட்டு » கோபா அமெரிக்கா கால்பந்து: கொலம்பியா காலிறுதிக்கு தகுதி
For advertising

கோபா அமெரிக்கா கால்பந்து: கொலம்பியா காலிறுதிக்கு தகுதி

Author: nithya at 8-06-2016, 19:39
கோபா அமெரிக்கா கால்பந்து: கொலம்பியா காலிறுதிக்கு தகுதி

கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் தொடங்கி 100 வருடங்கள் ஆவதை சிறப்பிக்க இந்த வருடம் சிறப்பு கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் நடத்த முடிவெடுக்கப்பட்டது. இதனடிப்படையில் தற்போது அமெரிக்காவில் இத் தொடர் நடைபெற்று வருகிறது.

நேற்று நடைபெற்ற ஒரு லீக் போட்டியில் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள கொலம்பியா- பராகுவே அணிகள் மோதின. முதல் பாதி ஆட்டத்தில் கொலம்பியா வீரர்கள் அதிக்கம் செலுத்தினார்கள். 12-வது நிமிடத்தில் கொலம்பியா அணிக்கு கார்லோஸ் முதல் கோலை பதிவு செய்தார். தொடர்ந்து 30-வது நிமிடத்தில் அந்த அணியின் கேப்டன் ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ் ஒரு கோல் போட முதல் பாதியில் கொலம்பியா 2-0 என முன்னிலை பெற்றது.

பின்னர் பராகுவே அணிக்கு 71-வது நிமிடத்தில் அயாலா ஒரு கோல் போட்டார். அதன்பின் இரண்டு அணிகளாலும் கோல் அடிக்க முடியாததால் கொலம்பியா 2-1 என வெற்றி பெற்றது.

ஏற்கனவே, முதல் போட்டியில் அமெரிக்காவை வீழ்த்தியதன் மூலம் கொலம்பியா அணி 2 வெற்றிகள் பெற்று 6 புள்ளிகளுடன் முதல் அணியாக காலிறுதிக்கு தகுதிப்பெற்றது.
Dear visitor, you went to website as unregistered user.
We encourage you to Register or Login to website under your name.

Comments:

Add Comments