Set as Homepage|Add to Favorites
 

பல பயனர் செய்தி இயந்திரம்,
சொந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது
இணையத்தில் மீடியா மற்றும் வலைப்பதிவுகள்.

 
Thatstamil.Codewarehouses.com » விளையாட்டு » எனது எதிர்காலத்தை பிசிசிஐ தான் தீர்மானிக்கும்: தோனி
For advertising

எனது எதிர்காலத்தை பிசிசிஐ தான் தீர்மானிக்கும்: தோனி

Author: nithya at 8-06-2016, 19:43
எனது எதிர்காலத்தை பிசிசிஐ தான் தீர்மானிக்கும்: தோனி

தனது எதிர்காலத்தை பிசிசிஐ தான் தீர்மானிக்க முடியும் என, இந்திய அணியின் ஒருநாள் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.

ஜிம்பாப்வே-க்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்தியா தலா 3 ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் ஒருநாள் ஆட்டம், வரும் 11-ம் தேதி ஹராரேயில் தொடங்குகிறது.

இதனிடையே, ஜிம்பாப்வே தொடருக்கு கிளம்பும் முன்பாக, மும்பையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தோனி, கேப்டன் பொறுப்பில் நீடிப்பது பற்றி, தாம் எந்த முடிவும் எடுக்க முடியாது என்றும், கேப்டன் பொறுப்புக்கு தகுதியில்லாதவன் என கருதும் போது, தன்னை நீக்கும் முடிவை பிசிசிஐ தான் எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதை அடுத்து, விராட்கோலி, இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.
Dear visitor, you went to website as unregistered user.
We encourage you to Register or Login to website under your name.

Comments:

Add Comments