Set as Homepage|Add to Favorites
 

பல பயனர் செய்தி இயந்திரம்,
சொந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது
இணையத்தில் மீடியா மற்றும் வலைப்பதிவுகள்.

 
Thatstamil.Codewarehouses.com » விளையாட்டு » இன்று 9-வது ஐ.பி.எல் கிரிக்கெட் இறுதிப் போட்டி : பெங்களூர்-ஐதராபாத் அணிகள் இன்று மோதல்
For advertising

இன்று 9-வது ஐ.பி.எல் கிரிக்கெட் இறுதிப் போட்டி : பெங்களூர்-ஐதராபாத் அணிகள் இன்று மோதல்

Author: nithya at 29-05-2016, 14:25
இன்று 9-வது ஐ.பி.எல் கிரிக்கெட் இறுதிப் போட்டி : பெங்களூர்-ஐதராபாத் அணிகள் இன்று மோதல்

பெங்களூரு - 9-வது ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் பெங்களூர் மற்றும் ஐதராபாத் அணிகள் மோதவுள்ளன. 9-வது ஐ.பி.எல். டி-20 கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 9-ம் தேதி தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்ற இந்தப்போட்டியில் கடந்த 22-ம் தேதியுடன் ‘லீக்’ ஆட்டங்கள் முடிந்தன. இதன் முடிவில் ரெய்னா தலைமையிலான குஜராத் லயன்ஸ், வீராட்கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், வார்னரின் சன்ரைசர்ஸ் ஐதராபாத், காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் முதல் 4 இடங்களை பிடித்து ‘பிளே ஆப்’ சுற்றுக்கு முன்னேறின. ‘பிளே ஆப்’ சுற்று 24-ம் தேதி தொடங்கியது. பெங்களூரில் நடந்த ‘குவாலி பையர் 1’ ஆட்டத்தில் பெங்களூர் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் லயன்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றது. எலிமினேட்டர் ஆட்டத்தில் ஐதராபாத் அணி 22 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது. இந்த தோல்வியால் கொல்கத்தா வெளியேற்றப்பட்டது.

நேற்று முன்தினம் நடந்த 2-வது தகுதிசுற்று ஆட்டத்தில் குஜராத் லயன்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் ஐதராபாத் அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது. ஐ.பி.எல். போட்டியின் இறுதி ஆட்டம் பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இதுவரை நடந்த 9 ஐ.பி.எல். போட்டியிலும் பெங்களூர் அணி விளையாடி உள்ளது. அந்த அணி தற்போது 3-வது முறையாக இறுதிப் போட்டியில் ஆடுகிறது. இதற்கு முன்பு 2009 மற்றும் 2011–ல் தகுதி பெற்று இருந்தது.

கடந்த இரண்டு முறையும் அந்த அணி இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவியது. 2009-ல் டெக்கான் சார்ஜசிடமும், 2011-ல் சென்னை சூப்பர் கிங்சிடமும் தோற்றது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 2013-ல் டெக்கான் சார்ஜர்ஸ் இடத்தில் அறிமுகம் ஆனது. தனது 4-வது போட்டியிலேயே அந்த அணி இறுதிப்போட்டிக்கு நுழைந்து உள்ளது. இதற்கு முன்பு 2013-ல் 4-வது இடத்தை பிடித்ததே அந்த அணியின் சிறப்பான நிலையாக இருந்தது. இந்த ஐ.பி.எல். சீசனில் இரு அணிகளும் மோதிய லீக் ஆட்டத்தில் தலா ஒரு வெற்றி பெற்றன. இரு அணிகளும் முறையாக ஐ.பி.எல். கோப்பையை பெறும் ஆர்வத்தில் உள்ளன.
Dear visitor, you went to website as unregistered user.
We encourage you to Register or Login to website under your name.

Comments:

Add Comments