Set as Homepage|Add to Favorites
 

பல பயனர் செய்தி இயந்திரம்,
சொந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது
இணையத்தில் மீடியா மற்றும் வலைப்பதிவுகள்.

 
Thatstamil.Codewarehouses.com » விளையாட்டு » ஆஸ்திரேலிய ஓபன் பாட்மிண்டன்: சாய்னா முன்னேற்றம்; சிந்து வெளியேற்றம்
For advertising

ஆஸ்திரேலிய ஓபன் பாட்மிண்டன்: சாய்னா முன்னேற்றம்; சிந்து வெளியேற்றம்

Author: nithya at 9-06-2016, 12:07
ஆஸ்திரேலிய ஓபன் பாட்மிண்டன்: சாய்னா முன்னேற்றம்; சிந்து வெளியேற்றம்

ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். பி.வி.சிந்து முதல் சுற்றில் தோல்வியடைந்து போட்டியில் இருந்து வெளியேறினார்.

முன்னதாக, சாய்னா நெவால் தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் ஜாய் லாயை சந்தித்தார். இருவருக்கும் இடையே பரபரப்பாக 29 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முடிவில் 21-10, 21-14 என்ற செட் கணக்கில் சாய்னா வெற்றி பெற்றார்.

போட்டித் தரவரிசையில் 7ஆவது இடத்தில் இருக்கும் சாய்னா, தனது இரண்டாவது சுற்றில் மலேசியாவின் ஜின் வெய் கோவை எதிர்கொள்கிறார்.

இந்நிலையில், உலகத் தரவரிசையில் 10ஆவது இடத்தில் இருக்கும் சிந்து, தனது முதல் சுற்றில் தென் கொரியாவின் கிம் ஹியோ மின்னை எதிர்கொண்டார். 55 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முடிவில் 15-21, 19-21 என்ற செட் கணக்கில் சிந்து தோல்வியுற்றார்.

மற்றொரு முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் தன்வி லாட், ஆஸ்திரேலியாவின் டிஃப்ஃபானி ஹோவை எதிர்கொண்டு 18-21, 21-14, 21-11 என்ற செட் கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

தன்வி தனது இரண்டாவது சுற்றில், போட்டித் தரவரிசையில் 4ஆவது இடத்தில் இருக்கும் வாங் யிஹானை எதிர்கொள்கிறார்.

ஆடவர் பிரிவில், ஹாங்காங்கின் கா லாங் அங்கûஸ எதிர்கொண்ட இந்தியாவின் ஸ்ரீகாந்த் பரபரப்பாக நடைபெற்ற 32 நிமிட ஆட்டத்தின் முடிவில் 21-16, 21-12 என்ற செட் கணக்கில் வென்றார்.

மற்றொரு ஆட்டத்தில் இந்தோனேசியாவின் இஷான் மெüலானா முஸ்தஃபாவை, இந்தியாவின் சமீர் சந்தித்தார். இருவருக்கும் இடையே 53 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முடிவில் 22-20, 15-21, 21-15 என்ற செட் கணக்கில் சமீர் வென்றார்.

ஸ்ரீகாந்த் தனது அடுத்த ஆட்டத்தில் இந்தோனேஷியாவின் சோனி துவி குன்கோரோவை எதிர்கொள்கிறார். ஆண்டனி சினிஸýகா கின்டிங்-செü தீன் சென் ஆகிய இருவருக்கும் இடையேயான ஆட்டத்தில் வெற்றி பெறுபவரை சமீர் எதிர்கொள்வார். மற்றொரு ஆட்டத்தில் ஹாங்காங்கின் ஹு யுன்னிடம் 19-21, 21-12, 15-21 என்ற செட் கணக்கில் வீழ்ந்தார் இந்தியாவின் குருசாய்தத்.
Dear visitor, you went to website as unregistered user.
We encourage you to Register or Login to website under your name.

Comments:

Add Comments