Set as Homepage|Add to Favorites
 

பல பயனர் செய்தி இயந்திரம்,
சொந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது
இணையத்தில் மீடியா மற்றும் வலைப்பதிவுகள்.

 
Thatstamil.Codewarehouses.com » விளையாட்டு » யூரோ கோப்பை: ஜெர்மனி, ஸ்பெயின் அணிகள் வெற்றி
For advertising

யூரோ கோப்பை: ஜெர்மனி, ஸ்பெயின் அணிகள் வெற்றி

Author: nithya at 14-06-2016, 11:03
யூரோ கோப்பை: ஜெர்மனி, ஸ்பெயின் அணிகள் வெற்றி

யூரோ கோப்பை கால்பந்து போட்டியை உலக சாம்பியன் ஜெர்மனி, நடப்பு சாம்பியன் ஸ்பெயின் ஆகிய அணிகள் வெற்றியோடு தொடங்கியுள்ளன.

பிரான்ஸில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் லில்லி நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் ஜெர்மனியும், உக்ரைனும் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் பெரும்பாலான நேரங்களில் ஜெர்மனியின் வசமே பந்து இருந்தது.

ஆட்டத்தின் 19-ஆவது நிமிடத்தில் ஜெர்மனிக்கு ஃப்ரீ கிக் கிடைத்தது. அதை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட டோனி குரூஸ் அற்புதமாக பந்தை கிராஸ் செய்தார். கோல் கம்பத்தின் முன்னால் நின்ற உக்ரைன் வீரர்களை தாண்டி பந்து செல்ல, இடதுபுறத்தில் இருந்து வேகமாக முன்னேறிய முஸ்தாபி தலையால் முட்டி அற்புதமாக கோலடித்தார்.

முதல் பாதி ஆட்டநேர முடிவில் 1-0 என முன்னிலை பெற்ற ஜெர்மனி, 2-ஆவது பாதி ஆட்டத்திலும் கோலடிக்க தீவிரம் காட்டியது. அதற்கு "இஞ்சுரி' நேரத்தில் (90+2) பலன் கிடைத்தது. மெசூத் ஓஸில் கொடுத்த பாûஸ பயன்படுத்தி ஸ்வெய்ன்ஸ்டீகர் அற்புதமாக கோலடிக்க, ஜெர்மனி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.

முழங்கால் காயம் காரணமாக 3 மாத ஓய்விலிருந்த ஸ்வெய்ன்ஸ்டீகர் முதல் ஆட்டத்திலேயே அசத்தியுள்ளார். எனினும் கடந்த 5 ஆண்டுகளில் சர்வதேச போட்டியில் அவர் அடித்த முதல் கோல் இதுதான். இந்த ஆட்டத்தில் ஜெர்மனி கோல் கீப்பர் மானுவேல் நுயாஸ் சிறப்பாக செயல்பட்டதோடு, முக்கியமான கட்டங்களில் உக்ரைனின் கோல் வாய்ப்புகளை முறியடித்தார்.

ஸ்பெயின் வெற்றி: டுலாவ்ஸ் நகரில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் செக்.குடியரசு அணியைத் தோற்கடித்தது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 87-ஆவது நிமிடத்தில் ஜெரார்டு பிக் அடித்த கோலால் ஸ்பெயினின் வெற்றி சாத்தியமானது.
Dear visitor, you went to website as unregistered user.
We encourage you to Register or Login to website under your name.

Comments:

Add Comments