Set as Homepage|Add to Favorites
 

பல பயனர் செய்தி இயந்திரம்,
சொந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது
இணையத்தில் மீடியா மற்றும் வலைப்பதிவுகள்.

 
Thatstamil.Codewarehouses.com » விளையாட்டு » ஐரோப்பிய கால்பந்து போட்டி: வெற்றியுடன் தொடங்கியது ஸ்பெயின் அணி
For advertising

ஐரோப்பிய கால்பந்து போட்டி: வெற்றியுடன் தொடங்கியது ஸ்பெயின் அணி

Author: nithya at 14-06-2016, 11:07
ஐரோப்பிய கால்பந்து போட்டி: வெற்றியுடன் தொடங்கியது ஸ்பெயின் அணி

ஐரோப்பிய கால்பந்து போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஸ்பெயின் அணி 1–0 என்ற கோல் கணக்கில் செக் குடியரசை வீழ்த்தி போட்டியை வெற்றியுடன் தொடங்கியது.

ஐரோப்பிய கால்பந்து போட்டி (யூரோ) பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் முடிவில் 16 அணிகள் 2–வது சுற்றை எட்டும்.

இதில் டவ்லுஸ் நகரில் நேற்று நடந்த ‘டி’ பிரிவு லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஸ்பெயின் அணி, செக் குடியரசை சந்தித்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 2008 மற்றும் 2012–ம் ஆண்டு சாம்பியனான ஸ்பெயின் அணியின் கட்டுப்பாட்டில் ஆட்டம் இருந்தாலும் அந்த அணியால் எளிதில் கோல் போட முடியவில்லை. செக் குடியரசு அணி எல்லா வகையிலும் ஸ்பெயினுக்கு ஈடுகொடுத்து ஆடியது.
ஸ்பெயின் அணி வெற்றி

முதல் பாதியில் ஸ்பெயின் வீரர் அல்வாரோ மோராட்டாவுக்கு கிடைத்த கோல் அடிக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தவில்லை. 87–வது நிமிடத்தில் ஸ்பெயின் அணி கோல் அடித்தது. அந்த அணி வீரர் ஜெரார்டு பிக்கு தலையால் முட்டி அபாரமாக கோல் அடித்தார். கடைசி வரை செக் குடியரசு பதில் கோல் திருப்பாததால் ஸ்பெயின் அணி 1–0 என்ற கோல் கணக்கில் வெற்றியுடன் போட்டியை தொடங்கியது.

முன்னதாக நைஸ் நகரில் நேற்று முன்தினம் நடந்த ‘சி’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் போலந்து–வடக்கு அயர்லாந்து அணிகள் மோதின. பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் போலந்து அணி 1–0 என்ற கோல் கணக்கில் வடக்கு அயர்லாந்து அணியை வீழ்த்தியது.
வடக்கு அயர்லாந்து தோல்வி

51–வது நிமிடத்தில் போலந்து அணி வீரர் அர்காடிஸ் மிலிக் அடித்த கோல் வெற்றி கோலாக அமைந்தது. வடக்கு அயர்லாந்து அணி கோல் திருப்ப எடுத்த முயற்சிக்கு கடைசி வரை பலன் கிடைக்கவில்லை. முடிவில் போலந்து அணி 1–0 என்ற கோல் கணக்கில் வடக்கு அயர்லாந்தை வீழ்த்தியது.

3–வது முறையாக ஐரோப்பிய கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்றுள்ள போலந்து அணி இதுவரை ஆடிய 7 ஆட்டங்களில் முதல் வெற்றியை ருசித்து உள்ளது. 30 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக பெரிய போட்டிக்கு தகுதி கண்ட வடக்கு அயர்லாந்து அணி இந்த சீசனில் தனது கடைசி 13 ஆட்டங்களில் சந்தித்த முதல் தோல்வி இதுவாகும்.
ஜெர்மனி அபாரம்

வில்லெனிவ் நகரில் இதே பிரிவில் நடந்த மற்றொரு லீக் ஆட்டத்தில் நடப்பு உலக சாம்பியன் ஜெர்மனி அணி 2–0 என்ற கோல் கணக்கில் உக்ரைனை சாய்த்தது. ஜெர்மனி அணி தரப்பில் முஸ்டாபி 19–வது நிமிடத்திலும், மாற்று ஆட்டக்காரர் பாஸ்டின் ஸ்வைன்டிகெர் கடைசி நிமிடத்திலும் கோல் அடித்தனர். கடைசி வரை ஜெர்மனியின் தடுப்பு ஆட்டத்தை உக்ரைன் அணியினரால் தகர்த்து கோல் அடிக்க முடியவில்லை. ஜெர்மனி அணியின் கோல் கீப்பர் மானுல் நீஸ் எதிரணியினரின் பல கோல் அடிக்கும் முயற்சிகளை லாவகமாக முறியடித்தார். உக்ரைன் அணி வீரர் கோல் எல்லை கோட்டுக்குள் பந்தை திணிக்கும் போது, தடுப்பு ஆட்டக்காரர் ஜெரோம் போட்டெங் அதிரடியாக செயல்பட்டு கோல் வாங்காமல் ஜெர்மனி அணியை காத்தார்.

இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் ஆஸ்திரியா–ஹங்கேரி (இரவு 9.30 மணி), போர்ச்சுகல்–ஐஸ்லாந்து (நள்ளிரவு 12.30 மணி) அணிகள் மோதுகின்றன.
Dear visitor, you went to website as unregistered user.
We encourage you to Register or Login to website under your name.

Comments:

Add Comments