Set as Homepage|Add to Favorites
 

பல பயனர் செய்தி இயந்திரம்,
சொந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது
இணையத்தில் மீடியா மற்றும் வலைப்பதிவுகள்.

 
Thatstamil.Codewarehouses.com » விளையாட்டு » சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை: ஒரே பிரிவில் இந்தியா, பாகிஸ்தான்
For advertising

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை: ஒரே பிரிவில் இந்தியா, பாகிஸ்தான்

Author: nithya at 2-06-2016, 10:26
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை: ஒரே பிரிவில் இந்தியா, பாகிஸ்தான்

‘மினி உலக கோப்பை’ என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி 1998-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வந்தது. கடைசியாக 2013-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த போட்டியில் டோனி தலைமையிலான இந்திய அணி சாம்பியன்ஸ் கோப்பையை 2-வது முறையாக வென்று வரலாறு படைத்தது.

இதற்கிடையே, ‘50 ஓவர் உலக கோப்பை ஏற்கனவே நடத்தப்பட்டு வருவதால் ஒரு வடிவிலான கிரிக்கெட்டுக்கு ஒரு மெகா போட்டி மட்டும் போதும்’ என்று கூறிய சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சாம்பியன்ஸ் கோப்பை போட்டி ரத்து செய்யப்படுவதாகவும், அதற்கு பதிலாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அறிமுகம் ஆக இருப்பதாகவும் அறிவித்தது. ஆனால் மறு ஆண்டே டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை நடத்த சாத்தியமில்லை என்று கூறிய ஐ.சி.சி. மீண்டும் 2017-ம் ஆண்டு முதல் சாம்பியன்ஸ் கோப்பை போட்டி தொடரும் என்று அறிவித்தது.

இதன்படி 8-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஜூன் 1-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை இங்கிலாந்தில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கு 2015-ம் ஆண்டு செப்டம்பர் 30-ந்தேதி நிலவரப்படி தரவரிசையில் டாப்-8 இடங்களை பிடித்த அணிகள் மட்டுமே தகுதி பெற்றுள்ளன. துரதிர்ஷ்டவசமாக முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் தகுதி பெறவில்லை.

இந்த நிலையில் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணையை ஐ.சி.சி. நேற்று வெளியிட்டது. இதன்படி ‘ஏ’ பிரிவில் உலக சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்காளதேசம் அணிகளும், பி பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, தென்ஆப்பிரிக்க அணிகளும் இடம் பெற்றுள்ளன. அடுத்த ஆண்டு ஜூன் 1-ந்தேதி நடக்கும் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வங்காளதேசத்தை எதிர்கொள்கிறது. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பரம எதிரியான பாகிஸ்தானை ஜூன் 4-ந்தேதி எட்ஜ்பஸ்டனில் சந்திக்கிறது.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். மொத்தம் 15 ஆட்டங்கள் நடைபெறுகிறது. இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் ஜூன் 18-ந்தேதி நடைபெறும். மழையால் பாதிக்கப்பட்டால் மறுநாள் (ரிசர்வ் டே) நடத்தப்படும்.

போட்டி அட்டவணையை வெளியிட்டு நிருபர்களிடம் பேசிய ஐ.சி.சி. தலைமை நிர்வாகி டேவிட் ரிச்சர்ட்சன் கூறும் போது, ‘ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை குறுகிய காலத்தில் நடத்தப்படும் துல்லியமான ஒரு போட்டித் தொடராகும். ரசிகர்களுக்கும், வீரர்களுக்கும் இந்த போட்டி உற்சாகமாக இருக்கும்.

இந்த சாம்பியன்ஸ் கோப்பை வெறும் ஒரு நாள் போட்டித் தொடர் மட்டும் அல்ல. இந்த போட்டி முடிந்து அடுத்த 3 மாதங்களில் 2019-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் பங்கேற்பதற்கான தரவரிசை தகுதி காலம் முடிவுக்கு வருகிறது. எனவே சாம்பியன்ஸ் கோப்பை போட்டியின் மூலம் ஒவ்வொரு அணிகளும் பெறும் தரவரிசை புள்ளி மிக முக்கியமானதாக இருக்கும்’ என்றார்.
Dear visitor, you went to website as unregistered user.
We encourage you to Register or Login to website under your name.

Comments:

Add Comments