Set as Homepage|Add to Favorites
 

பல பயனர் செய்தி இயந்திரம்,
சொந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது
இணையத்தில் மீடியா மற்றும் வலைப்பதிவுகள்.

 
Thatstamil.Codewarehouses.com » விளையாட்டு » தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பள்ளி மாணவி தங்கப்பதக்கம் வென்று சாதனை
For advertising

தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பள்ளி மாணவி தங்கப்பதக்கம் வென்று சாதனை

Author: nithya at 2-06-2016, 10:59
தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பள்ளி மாணவி தங்கப்பதக்கம் வென்று சாதனை

டெல்லியில் கராத்தே அசோசியேசன் ஆப் இந்தியா சார்பில் தேசிய அளவிலான கராத்தே போட்டி பல்வேறு பிரிவுகளாக நடைபெற்றது. போட்டி கடந்த மாதம் 20, 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் டெல்லியில் உள்ள தல்கோத்ரா மைதானத்தில் நடந்தது. இதில் பங்கேற்க பல்வேறு மாநிலங்களில் இருந்து 1500 பேர் கலந்து கொண்டனர்.

அதில் 16 மற்றும் 17 வயதிற்கு உட்பட்டோருக்கான பெண்கள் 48 கிலோ எடை பிரிவில் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியை சேர்ந்த தங்கராஜ் மற்றும் கஸ்தூரி ஆகியோரின் மகள் பத்மஸ்ரீ (வயது 16) தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.பத்மஸ்ரீ அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். மாணவியை ஹயாஷி-ஹா கராத்தே கழக அகில இந்திய பொதுச்செயலாளர் வி.எம்.சி.மனோகரன் மற்றும் பயிற்சியாளர் தங்கவேல் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

இதுகுறித்து ஹயாஷி-ஹா கராத்தே கழக அகில இந்திய பொதுச்செயலாளர் வி.எம்.சி.மனோகரன் கூறியதாவது:-

வெற்றி பெற்ற மாணவி பத்மஸ்ரீ கடந்த 5 ஆண்டுகளாக பயிற்சி பெற்று வருகிறார். மேலும், மாவட்ட மற்றும் மாநில அளவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார். தீவிர பயிற்சி மூலம் தற்போது நடைபெற்று முடிந்த தேசிய அளவிலான போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

கிராமப்புறத்தில் இருந்து ஒரு மாணவி அகில இந்திய அளவில் நடைபெற்ற போட்டியில் தங்கப்பதக்கம் வென்று இருப்பது மிகவும் அரிதான ஒன்றாகும். இந்த சாதனை அவருக்கு கிடைத்த வெற்றி மட்டுமல்ல ஒட்டு மொத்த கிராமப்புற இளைஞர்களுக்கும் கிடைத்த வெற்றியாகும். இந்த வெற்றியின் மூலம் இவர் ஆசியா மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.
Dear visitor, you went to website as unregistered user.
We encourage you to Register or Login to website under your name.

Comments:

Add Comments