Set as Homepage|Add to Favorites
 

பல பயனர் செய்தி இயந்திரம்,
சொந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது
இணையத்தில் மீடியா மற்றும் வலைப்பதிவுகள்.

 
Thatstamil.Codewarehouses.com » தமிழகம் » நத்தம் விஸ்வநாதன் பதவி பறிப்பு: அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் அதிரடி மாற்றம்; ஜெயலலிதா அறிவிப்பு
For advertising

நத்தம் விஸ்வநாதன் பதவி பறிப்பு: அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் அதிரடி மாற்றம்; ஜெயலலிதா அறிவிப்பு

Author: nithya at 9-06-2016, 09:47
நத்தம் விஸ்வநாதன் பதவி பறிப்பு: அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் அதிரடி மாற்றம்; ஜெயலலிதா அறிவிப்பு

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்களை அதிரடியாக மாற்றி அமைத்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை-காஞ்சீபுரம்

வட சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் கே.எஸ்.சீனிவாசன் இன்று முதல் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். வட சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் நா.பாலகங்கா (முன்னாள் வாரியத்தலைவர்) இன்று முதல் நியமிக்கப்படுகிறார்.

தென் சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் தி.நகர். பி.சத்யா அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். தென் சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் வி.பி.கலைராஜன் நியமிக்கப்படுகிறார்.

காஞ்சீபுரம் மத்திய மாவட்ட செயலாளர் பொறுப்பில் எஸ்.ஆறுமுகம் (திருக்கழுக்குன்றம் ஒன்றிய செயலாளர்) நியமிக்கப்படுகிறார். காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அவைத்தலைவர் பொறுப்பில் இருக்கும் மணப்பாக்கம் மு.காமராஜ், குன்றத்தூர் ஒன்றிய செயலாளர் பொறுப்பில் இருக்கும் கே.பழனி எம்.எல்.ஏ., ஆகியோர் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.

அ.தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் பொறுப்பிலும், காஞ்சீபுரம் மத்திய மாவட்ட மகளிர் அணி செயலாளர் பொறுப்பிலும் இருக்கும் கணிதா சம்பத், காட்டாங்கொளத்தூர் ஒன்றிய செயலாளர் பொறுப்பில் இருக்கும் இ.சம்பத்குமார் ஆகியோர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.

வேலூர்-திருவண்ணாமலை

வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் வி.ராமு (இவர் ஏற்கனவே வகித்து வரும் மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் பொறுப்பில் தொடர்ந்து பணியாற்றுவார்.) வேலூர் கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் பொறுப்பில் இருக்கும் வி.பாலசுந்தரம் ஆகியோர் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.

வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் என்.ஜி.பார்த்திபன் எம்.எல்.ஏ. (சோளிங்கர் சட்டமன்ற தொகுதி), வேலூர் கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் பொறுப்பில் சுமைதாங்கிசி.ஏழுமலை, வேலூர் கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணை செயலாளர் பொறுப்பில் வி.பாலசுந்தரம் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் முக்கூர் என்.சுப்பிரமணியன் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் தூசி கே.மோகன் (வெம்பாக்கம் கிழக்கு ஒன்றிய செயலாளர்) நியமிக்கப்படுகிறார்.

விழுப்புரம்-ராமநாதபுரம்

விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் கதிர்.தண்டபாணி, விழுப்புரம் தெற்கு மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் பொறுப்பில் இருக்கும் பா.அய்யம்பெருமாள் ஆகியோர் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள். விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இரா.குமரகுரு எம்.எல்.ஏ., விழுப்புரம் தெற்கு மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் பொறுப்பில் கதிர்.தண்டபாணி, விழுப்புரம் தெற்கு மாவட்ட விவசாய பிரிவு இணை செயலாளர் பொறுப்பில் பா.அய்யம்பெருமாள் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.

திண்டுக்கல் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் நத்தம் விஸ்வநாதன், நத்தம் சட்டமன்ற தொகுதி செயலாளர் பொறுப்பில் இருக்கும் என்.கண்ணன் ஆகியோர் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள். திண்டுக்கல் மாவட்ட செயலாளர் பொறுப்பில் வி.மருதராஜ் (திண்டுக்கல் மாநகராட்சி மேயர்) நியமிக்கப்படுகிறார்.

ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஆர்.தர்மர் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் பொறுப்பில் டாக்டர் எம்.மணிகண்டன் (மருத்துவ அணி துணைச்செயலாளர், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்) நியமிக்கப்படுகிறார்.

திருநெல்வேலி-கன்னியாகுமரி

திருநெல்வேலி மாநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் எஸ்.முத்துக்கருப்பன் எம்.பி., திருநெல்வேலி மாநகர் மாவட்ட இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளர் பொறுப்பில் இருக்கும் எம்.ஹரிஹர சிவசங்கர் ஆகியோர் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள். திருநெல்வேலி மாநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் பாப்புலர் வி.முத்தையா நியமிக்கப்படுகிறார்.

திருநெல்வேலி புறநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஆர்.முருகையாபாண்டியன் எம்.எல்.ஏ. அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். திருநெல்வேலி புறநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் பி.நாராயண பெருமாள் (அமைப்பு செயலாளர்) நியமிக்கப்படுகிறார்.

கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் என்.தளவாய்சுந்தரம் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் பொறுப்பில் ஏ.விஜயகுமார் (மாவட்ட வக்கீல் பிரிவு இணை செயலாளர்) நியமிக்கப்படுகிறார்.

ஈரோடு

ஈரோடு புறநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ., அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். ஈரோடு புறநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் கே.சி.கருப்பணன் (சுற்றுச்சூழல் துறை அமைச்சர்) நியமிக்கப்படுகிறார்.

ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் வி.பி.சிவசுப்பிரமணி எம்.எல்.ஏ. அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் கே.வி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. (ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதி) நியமிக்கப்படுகிறார்.

கரூர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் (போக்குவரத்து துறை அமைச்சர்), சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.

தேனி

தேனி மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் டி.டி.சிவக்குமார், தேனி மாவட்ட இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளர் பொறுப்பில் இருக்கும் ரவீந்திரநாத்குமார், உத்தமபாளையம் ஒன்றிய ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஸ்டார் எம்.ரபீக், பெரியகுளம் ஒன்றிய செயலாளர் பொறுப்பில் இருக்கும் எம்.செல்லமுத்து ஆகியோர் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.

தேனி மாவட்ட செயலாளராக தங்க தமிழ்செல்வன் எம்.எல்.ஏ., ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் ஸ்டார் ரபீக், இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் எஸ்.கே.எம்.மணி, பெரியகுளம் ஒன்றிய செயலாளர் வி.அன்னபிரகாஷ் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிவிப்பில் அவர் கூறியுள்ளார்.
Dear visitor, you went to website as unregistered user.
We encourage you to Register or Login to website under your name.

Comments:

Add Comments