Set as Homepage|Add to Favorites
 

பல பயனர் செய்தி இயந்திரம்,
சொந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது
இணையத்தில் மீடியா மற்றும் வலைப்பதிவுகள்.

 
Thatstamil.Codewarehouses.com » தமிழகம் » அதிமுகவில் செய்தித் தொடர்புக் குழு: 14 பேரை நியமித்து ஜெயலலிதா உத்தரவு
For advertising

அதிமுகவில் செய்தித் தொடர்புக் குழு: 14 பேரை நியமித்து ஜெயலலிதா உத்தரவு

Author: nithya at 9-06-2016, 09:50
அதிமுகவில் செய்தித் தொடர்புக் குழு: 14 பேரை நியமித்து ஜெயலலிதா உத்தரவு

அதிமுகவில் செய்தித் தொடர்புக் குழுவில் 14 பேரை நியமித்து, முதல்வரும், கட்சியின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

ஊடகங்களோடு தொடர்பு கொள்ளவும், பேட்டி அளிக்கவும் அதிமுக செய்தித் தொடர்பாளர்களாக 14 பேர் நியமிக்கப்படுகின்றனர்.

முன்னாள் அமைச்சர்கள் சி.பொன்னையன், பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன், ஆர்.வைத்திலிங்கம், பா.வளர்மதி, வைகைச்செல்வன், தலைமைக் கழக பேச்சாளர்கள் நாஞ்சில் சம்பத், கோ.சமரசம், பேராசிரியர் தீரன், நிர்மலா பெரியசாமி, முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், மகளிரணி துணைச் செயலாளர் சி.ஆர்.சரஸ்வதி, சிவகங்கை மாவட்டத்தின் எம்.கௌரிசங்கர், ஆவடி தொகுதி எம்.எல்.ஏ. க.பாண்டியராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. கோவை செல்வராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
Dear visitor, you went to website as unregistered user.
We encourage you to Register or Login to website under your name.

Comments:

Add Comments