Set as Homepage|Add to Favorites
 

பல பயனர் செய்தி இயந்திரம்,
சொந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது
இணையத்தில் மீடியா மற்றும் வலைப்பதிவுகள்.

 
Thatstamil.Codewarehouses.com » தமிழகம் » தலைமைச் செயலராக ராம மோகன ராவ் நியமனம்
For advertising

தலைமைச் செயலராக ராம மோகன ராவ் நியமனம்

Author: nithya at 9-06-2016, 09:53
தலைமைச் செயலராக ராம மோகன ராவ் நியமனம்

தமிழக அரசின் தலைமைச் செயலராக பி.ராம மோகன ராவ் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு விழிப்புப் பணி நிர்வாகச் சீர்திருத்தத் துறை ஆணையாளர் பொறுப்பும் கூடுதலாக அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை தலைமைச் செயலர் பொறுப்பில் இருந்த கு.ஞானதேசிகன் புதன்கிழமை பிறப்பித்தார்.

தலைமைச் செயலராக இருந்த கு.ஞானதேசிகன், தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் (டிட்கோ) தலைவர்-நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

1985-ஆம் ஆண்டு பிரிவு: ஆந்திரத்தை பூர்வீகமாகக் கொண்ட ராமமோகன ராவ், 1957-ஆம் ஆண்டு செப்டம்பர் 15-இல் பிறந்தவர். வணிகம்-பொருளாதாரப் பாடங்களில் முதுநிலைப் பட்டங்களைப் பெற்றுள்ளார்.

1985-ஆம் ஆண்டு தமிழகப் பிரிவு ஐ.ஏ.எஸ்., அதிகாரியாகப் பணியில் சேர்ந்தார்.

தாய் மொழி தெலுங்கு என்றாலும், தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்தவர்.

உதவி ஆட்சியராக இருந்து...: பயிற்சி அதிகாரியாகப் பணியில் இருந்தார். இதன்பின், 1987 முதல் 1992 ஜூன் வரையில் உதவி ஆட்சியர், கூடுதல் ஆட்சியர் உள்ளிட்ட பணிகளில் செயலாற்றினார்.

1992 முதல் 1994 வரையில் கூட்டுறவுச் சங்கங்களின் கூடுதல் பதிவாளராகவும், 1994 முதல் 1996 வரையில் மாவட்ட ஆட்சியராகவும் பணியாற்றினார்.

குடிநீர் வழங்கல் செயல் இயக்குநர், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை ஆணையாளர், தமிழ்நாடு காகித ஆலை நிறுவனத்தின் தலைவர், நெடுஞ்சாலைகள் துறையின் செயலர், வீட்டு வசதி நகர்ப்புற வளர்ச்சித் துறையின் தலைவர்-நிர்வாக இயக்குநர், சமூக நலன்-சத்துணவுத் திட்டம், வேளாண்மை ஆகிய துறைகளின் முதன்மைச் செயலராகவும் இருந்துள்ளார்.

முதல்வரின் செயலராக 5 ஆண்டுகள்..: 2011-ஆம் ஆண்டு மே 16-ஆம் தேதி அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் முதல்வரின் இரண்டாவது செயலராகப் பணியாற்றினார். தொடர்ந்து, 5 ஆண்டுகளும் பொறுப்பை வகித்து வந்தார்.

இந்த நிலையில், ஜூன் 1-ஆம் தேதி முதல், முதல்வரின் முதல் செயலர் என்ற அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டார். இப்போது தலைமைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

44-ஆவது தலைமைச் செயலர்: 44-வது தலைமைச் செயலரான ராம மோகன ராவ், சில மாதங்களுக்கு முன்பு அவர் கூடுதல் தலைமைச் செயலாளர் என்ற அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டு குறிப்பிடத்தக்கது.

2011-இல் அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் தேவேந்திரநாத் சாரங்கி தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து, ஷீலா பாலகிருஷ்ணன் (டிசம்பர் 2012), மோகன் வர்கீஸ் சுங்கத் (மார்ச் 2014), கு.ஞானதேசிகன் (டிசம்பர் 2014) ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

ஓராண்டு பணிக் காலம்: ராம மோகன ராவ் 59 வயதை நெருங்குகிறார். ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு ஓய்வு வயது 60 என்பதால், இன்னும் ஓராண்டு பணிக் காலம் உள்ளது. அதுவரை அவர் தொடர்ந்து தலைமைச் செயலாளர் பதவியில் நீடிப்பார். பணிக்காலம் நீட்டிக்கப்படும் நிலையில், தொடர வாய்ப்பு உள்ளது.
Dear visitor, you went to website as unregistered user.
We encourage you to Register or Login to website under your name.

Comments:

Add Comments