Set as Homepage|Add to Favorites
 

பல பயனர் செய்தி இயந்திரம்,
சொந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது
இணையத்தில் மீடியா மற்றும் வலைப்பதிவுகள்.

 
Thatstamil.Codewarehouses.com » தமிழகம் » தமிழிசை சவுந்தரராஜன் அல்ல; தமிழ்வசை சவுந்தரராஜன்: இளங்கோவன் தாக்கு
For advertising

தமிழிசை சவுந்தரராஜன் அல்ல; தமிழ்வசை சவுந்தரராஜன்: இளங்கோவன் தாக்கு

Author: nithya at 9-06-2016, 10:06
தமிழிசை சவுந்தரராஜன் அல்ல; தமிழ்வசை சவுந்தரராஜன்: இளங்கோவன் தாக்கு

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் இளங்கோவன் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையத்திற்கு வந்திருந்தார். அந் நிகழ்ச்சிக்கு பின்னர், பயணியர் விடுதியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய இளங்கோவன், “சத்தியமங்கலம் மற்றும் கடலூர் பகுதியில் பலத்த காற்றுடன் பெய்த மழையின் காரணமாக, 80 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாழை மரங்கள் விழுந்து நாசமாகியுள்ளன. இதில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, தமிழக அரசு முழுமையான இழப்பீடு வழங்க வேண்டும்.

வரும் உள்ளாட்சி தேர்தலில், காங்கிரஸ் கட்சி மக்கள் நலனுக்காக, தி.மு.க.,வுடன் இணைந்து செயல்படுவோம்.

சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்திக்கவில்லை. தற்போது எட்டு எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இதன் மூலம், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.

பா.ஜ.கவின் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு கூறுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அவரை தமிழிசை சவுந்தரராஜன் அல்ல, தமிழ்வசை சவுந்தரராஜன்' என்று தான், கூறவேண்டும். அவர் கூறும் குற்றச்சாட்டுகளை பெரிதுபடுத்த தேவையில்லை”என்று கூறினர்.
Dear visitor, you went to website as unregistered user.
We encourage you to Register or Login to website under your name.

Comments:

Add Comments