Set as Homepage|Add to Favorites
 

பல பயனர் செய்தி இயந்திரம்,
சொந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது
இணையத்தில் மீடியா மற்றும் வலைப்பதிவுகள்.

 
Thatstamil.Codewarehouses.com » தமிழகம் » பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீடு: வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: ராமதாஸ்
For advertising

பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீடு: வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: ராமதாஸ்

Author: nithya at 9-06-2016, 10:14
பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீடு: வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: ராமதாஸ்

தனியார் பள்ளிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் நலனுக்காக கல்வி பெறும் உரிமைச் சட்டம் 2009-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி அரசு, தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களை ஏழை மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும். அவர்களுக்கான கட்டணத்தை மத்திய, மாநில அரசுகள் ஏற்கும். அந்த மாணவர்களுக்கு 8-ஆம் வகுப்பு வரை இலவசக் கல்வி வழங்கப்பட வேண்டும்.

தமிழகத்தில் இந்தச் சட்டம் 2011-ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது. ஆரம்பத்தில் பெரும்பாலான பள்ளிகள் 25 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க மறுத்தன. ஒரு கட்டத்தில், ஒரு சில இடங்களை ஏழை மாணவர்களைக் கொண்டு நிரப்பிய தனியார் பள்ளிகள், மீதமுள்ள இடங்களில் உயர்தர வகுப்பு மாணவர்களை ஏழைகளாகக் கணக்கு காட்டி நிரப்பின.

கடந்த ஆண்டுக்கான கல்விக் கட்டணத்தை தமிழக அரசு வழங்கவில்லை என்று கூறி நிகழ் கல்வியாண்டில் ஏழை மாணவர்களைச் சேர்க்க முடியாது என்று பல தனியார் பள்ளிகள் அறிவித்துவிட்டன. இதே நிலை நீடித்தால் தனியார் கல்வி நிறுவனங்கள் வைத்ததுதான் சட்டம் என்ற நிலை ஏற்பட்டுவிடும்.

எனவே, அனைத்துத் தனியார் பள்ளிகளிலும் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

கடந்த 6 ஆண்டுகளில் கல்வி உரிமைச் சட்டப்படி நடைபெற்ற மாணவர் சேர்க்கை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
Dear visitor, you went to website as unregistered user.
We encourage you to Register or Login to website under your name.

Comments:

Add Comments
  • Group: Guests
  • ICQ:
  • Register: --
  • Status:
  • Comments: 0
  • News: 0
^
dna moczanowa przyczyny dna alkohol http://seeknet.pl/ co to jest dna? dna moczanowa a dieta