Set as Homepage|Add to Favorites
 

பல பயனர் செய்தி இயந்திரம்,
சொந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது
இணையத்தில் மீடியா மற்றும் வலைப்பதிவுகள்.

 
Thatstamil.Codewarehouses.com » தமிழகம் » விபத்தில் மூளைச்சாவு அடைந்த மாணவி..! 5 பேரை வாழ வைத்த நெகிழ்ச்சி சம்பவம்
For advertising

விபத்தில் மூளைச்சாவு அடைந்த மாணவி..! 5 பேரை வாழ வைத்த நெகிழ்ச்சி சம்பவம்

Author: nithya at 13-06-2016, 12:20
விபத்தில் மூளைச்சாவு அடைந்த மாணவி..! 5 பேரை வாழ வைத்த நெகிழ்ச்சி சம்பவம்

ஈரோட்டில் நடந்த விபத்தில் மூளைச்சாவு அடைந்த பிளஸ்2 மாணவியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. மகளை இழந்த சோகத்திலும் மகளின் உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் முன்வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி மேகறையைச் சேர்ந்த மதியழகன்- அமுதா தம்பதிக்கு பூமா (17), கார்த்திகா (15) என்ற இரண்டு மகள்கள். மதியழகன் பெங்களூரு விஜயநகரில் எலக்ட்ரானிக்ஸ் கடை வைத்துள்ளார். பிளஸ் 2 முடித்த பூமா என்ஜினீயரிங் படிப்பதற்காக பெங்களூருவில் உள்ள ஒரு கல்லூரியில் விண்ணப்பித்து இருந்தார். இந்த நிலையில், மதியழகனின் உறவினர் ஒருவர் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் வீடு கட்டி உள்ளார். இதன் கிரகப்பிரவேசத்தில் கலந்து கொண்டுவிட்டு 4 பேரும் கடந்த 9ம் தேதி இரவு பெங்களூருவுக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். காரை மதியழகன் ஓட்டினார். கார் ஈரோடு அருகே சித்தோடு தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது திடீரென நிலைதடுமாறி கவிழ்ந்தது.

இந்த விபத்தில் மதியழகன், அமுதா, பூமா, கார்த்திகா ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர். அமுதாவும், கார்த்திகாவும் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மதியழகனும், பூமாவும் மேல்சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பூமா சுயநினைவின்றி இருந்தார். பரிசோதனை செய்த டாக்டர்கள், பூமாவுக்கு மூளைச்சாவு ஏற்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுபற்றி சிகிச்சை பெற்று வந்த பூமாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மகளின் நிலை பற்றி கேட்டதும் அவர்கள் வேதனை அடைந்தனர்.

மகளை இழந்த சோகத்திலும் பூமாவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் முன்வந்தனர். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பூமாவின் உடலை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அதில், இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகங்கள், கண்கள் உள்ளிட்ட உறுப்புகளை எடுக்க முடிவு செய்யப்பட்டது. இதயம், நுரையீரல் ஆகிய உறுப்புகளை சென்னையில் உள்ள லைப்லைன் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து நோயாளிகளுக்கு பொருத்த முடிவு செய்யப்பட்டது. மூளைச்சாவு அடைந்த பூமாவின் உடல் உறுப்புகளை டாக்டர்கள் நேற்று காலை 8.45 மணி அளவில் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்.

அதன்பின்னர் இதயம், நுரையீரல் ஆகிய 2 உறுப்புகளும் ஒரு ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் குறிப்பிட்ட நேரத்தில் செல்லவேண்டும் என்பதற்காக ஆங்காங்கே காவல்துறையினர் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தியும், போக்குவரத்தை ஒழுங்கு படுத்தியும் ஆம்புலன்சுக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தனர். அந்த ஆம்புலன்ஸ் கோவை விமான நிலையம் சென்றடைந்தது. அங்கிருந்து காலை 10.50 மணிக்கு புறப்பட்ட விமானம் மூலம் இதயம், நுரையீரல் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டு தேவையான நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டது.
Dear visitor, you went to website as unregistered user.
We encourage you to Register or Login to website under your name.

Comments:

Add Comments