Set as Homepage|Add to Favorites
 

பல பயனர் செய்தி இயந்திரம்,
சொந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது
இணையத்தில் மீடியா மற்றும் வலைப்பதிவுகள்.

 
Thatstamil.Codewarehouses.com » தமிழகம் » நாளை தில்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்திக்கிறார் ஜெயலலிதா
For advertising

நாளை தில்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்திக்கிறார் ஜெயலலிதா

Author: nithya at 13-06-2016, 12:23
நாளை தில்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்திக்கிறார் ஜெயலலிதா

தமிழக முதல்வர் ஜெயலலிதா நாளை தில்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்திக்கிறார். அப்போது தமிழகத்தின் முக்கிய பிரச்னைகள் குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்த சந்திப்பின் போது காவிரி மேலாண்மை வாரியம்-காவிரி நதிநீர் ஒழுங்குமுறை குழு அமைப்பது, தமிழக மீனவர்கள் பிரச்னை, கச்சத்தீவு மீட்பு விவகாரம், மத்திய அரசிடம் இருந்து கூடுதல் நிதியைப் பெறுவது, தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்துக்கு டிஜிட்டல் உரிமத்துக்கான அனுமதி, ஜல்லிக்கட்டு மீதான தடை நீக்கம்,

உயர்நீதிமன்றங்களில் தமிழை அலுவல் மொழியாக்க வேண்டும் தமிழகத்தின் கடன் சுமை, ராஜீவ் கொலை குற்றவாளிகளின் விடுதலை, மீனவர்கள் கைது, இலங்கை தமிழர் பிரச்னை, உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்க உள்ளதாக தெரிகிறது.

2014-ஆம் ஆண்டு ஜூன் 3-இல் பிரதமர் மோடியை ஜெயலலிதா சந்தித்தார். இதைத் தொடர்ந்து, 2015-ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் சென்னைக்கு வந்த பிரதமர் மோடி, முதல்வர் ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

தமிழக முதல்வராக ஆறாவது முறையாக ஜெயலலிதா பொறுப்பேற்ற பின்னர், பிரதமர் மோடியை சந்திப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
Dear visitor, you went to website as unregistered user.
We encourage you to Register or Login to website under your name.

Comments:

Add Comments