Set as Homepage|Add to Favorites
 

பல பயனர் செய்தி இயந்திரம்,
சொந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது
இணையத்தில் மீடியா மற்றும் வலைப்பதிவுகள்.

 
Thatstamil.Codewarehouses.com » தமிழகம் » முதல்வரின் டெல்லி பயணத்தால் தமிழக மக்களுக்கு எந்த பயனும் கிடைக்காது
For advertising

முதல்வரின் டெல்லி பயணத்தால் தமிழக மக்களுக்கு எந்த பயனும் கிடைக்காது

Author: nithya at 14-06-2016, 10:12
முதல்வரின் டெல்லி பயணத்தால் தமிழக மக்களுக்கு எந்த பயனும் கிடைக்காது

முதல்வரின் டெல்லி பயணத்தால் அவருக்கு மட்டுமே பயனளிக்கும். இதனால் தமிழக மக்களுக்கு எந்த பயனும் ஏற்படாது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார். கரூர் மேற்கு மாவட்ட தமாகா தலைவர் ஸ்டீபன் பாபு தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலையில் காங்கிரசில் இணைந்தனர். சத்தியமூர்த்தி பவனில் நேற்று காலை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பீட்டர் அல்போன்ஸ், செல்வப்பெருந்தகை, ஜோதி, ராஜசேகரன், எம்.எஸ்.திரவியம் உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர், ஈவிகேஎஸ் இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது: தமாகாவில் இருந்து விலகி ஏராளமானோர் காங்கிரசில் இணைகின்றனர். அவர்களை மனதார வரவேற்கிறேன்.

இன்னும் உண்மையான காங்கிரஸ்காரர்கள் தமாகாவில் இருந்து விலகி காங்கிரசில் இணைய அழைப்பு விடுக்கிறேன். தமாகாவில் இருந்து விலகியவர்கள் அதிமுகவில் இணைவதாக வதந்தி பரப்புகின்றனர். தமாகாவில் இருந்து விலகியவர்களுக்கு காங்கிரஸ் தான் தாய் வீடு. முதல்வர் ஜெயலலிதா டெல்லிக்கு பயணம் செய்ய உள்ளார். அவரது டெல்லி பயணத்தால் தமிழக மக்களுக்கு எந்த பயனும் கிடைக்கப்போவதில்லை. வழக்குகளில் இருந்து தன்னை விடுவித்து கொள்ளவும், உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக பேசுவதற்காகத் தான் அவர் டெல்லி செல்கிறார். உள்ளாட்சி தேர்தலிலும் திமுக, காங்கிரஸ் கூட்டணி தொடரும். அகில இந்திய காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி, தலைவராக வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அதையே நாங்களும் விரும்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
Dear visitor, you went to website as unregistered user.
We encourage you to Register or Login to website under your name.

Comments:

Add Comments