Set as Homepage|Add to Favorites
 

பல பயனர் செய்தி இயந்திரம்,
சொந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது
இணையத்தில் மீடியா மற்றும் வலைப்பதிவுகள்.

 
Thatstamil.Codewarehouses.com » தமிழகம் » தேனி ஊராட்சி ஒன்றிய பகுதியில் குண்டும், குழியுமான சாலையால் பொதுமக்கள் பாதிப்பு கவுன்சிலர்கள் புகார்
For advertising

தேனி ஊராட்சி ஒன்றிய பகுதியில் குண்டும், குழியுமான சாலையால் பொதுமக்கள் பாதிப்பு கவுன்சிலர்கள் புகார்

Author: nithya at 15-06-2016, 12:56
தேனி ஊராட்சி ஒன்றிய பகுதியில் குண்டும், குழியுமான சாலையால் பொதுமக்கள் பாதிப்பு கவுன்சிலர்கள் புகார்

தேனி ஊராட்சி ஒன்றிய பகுதியில் குண்டும், குழியுமான சாலையால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருவதாக கவுன்சிலர்கள் கூட்டத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.

ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்

தேனி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் தலைவர் அம்சகோமதி தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் ரமேஷ்பாபு, வட்டார வளர்ச்சி அதிகாரி கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அனைத்து கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் உறுப்பினர்கள் இடையே நடந்த விவாதம் வருமாறு:–
பொதுமக்கள் அவதி

ரமேஷ்பாபு:– தமிழ்நாட்டில் 6–வது முறையாக முதல்–அமைச்சராக பதவி ஏற்ற ஜெயலலிதாவுக்கு பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன்.

சங்கீதா:– எங்கள் பகுதியில் வாரத்திற்கு ஒருமுறை தான் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

வட்டார வளர்ச்சி அதிகாரி:– இதுகுறித்து குடிநீர் வடிகால்வாரிய அதிகாரிகளிடம் பேசி தீர்வு காணப்படும்.

அழகேசன்:– அரண்மனைப்புதூரில் ஹைமாஸ் விளக்குகள் போட வேண்டும். எங்கள் பகுதியை சேர்ந்த முதியவர்களுக்கு இதுவரை உதவித்தொகை வழங்கப்படவில்லை.

தலைவர்:– நிதி வந்தவுடன் ஹைமாஸ் விளக்குகள் போடப்படும். முதியோர் உதவித்தொகையும் வழங்கப்படும்.
குண்டும், குழியுமான சாலை

வெங்கிடுசாமி:– எங்கள் பகுதியில் கடந்த 5 ஆண்டுகளாக எந்த பணியும் நடைபெறவில்லை. ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் சாலைகள் குண்டும், குழியுமாக காட்சி அளித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே சேதம் அடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும்.

வட்டார வளர்ச்சி அதிகாரி:– நிதி வந்தவுடன் இந்த பணிகள் நிறைவேற்றப்படும்.

குருசாமி:– 11 மணிக்கு நடைபெற வேண்டிய கூட்டம் 12 மணிக்கு தொடங்குகிறது. தலைவர் மற்றும் அதிகாரிகளுக்கு அரசு வாகனங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே அவர்கள் கிராமப்பகுதிகளுக்கு சென்று பொதுமக்களின் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்ய வேண்டும்.

அதிகாரி:– பல்வேறு கவுன்சிலர்கள் வெளியூர்களில் இருந்து வருகிறார்கள். அதனால் கூட்டம் தொடங்க கூடுதல் நேரம் ஆகிறது.
பேவர்பிளாக் சாலை

கிருஷ்ணசாமி:– கிராமப்பகுதிகளில் சிமெண்ட் சாலைகள் போட ஏற்பாடு செய்ய வேண்டும்.

தலைவர்:– இதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய ஏற்பாடு செய்யப்படும். மேலும் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் நிதியும் கேட்கப்படும்.

குருசாமி:– சீலையம்பட்டி–தர்மாபுரி சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தலைவர்:– இந்த பணிகளுக்கு தேவையான நிதி ஊராட்சியில் இல்லை. எனவே நிதி வந்தவுடன் பணிகள் நிறைவேற்றப்படும்.

மேற்கண்டவாறு விவாதங்கள் நடைபெற்றன.

பின்னர் மல்லையகவுண்டன்பட்டியில் சாக்கடை வசதியுடன் பேவர்பிளாக் சாலை அமைத்தல், காட்டுநாயக்கன்பட்டியில் சிறுபாலம் கட்டுதல், உப்பார்பட்டியில் ஆழ்குழாய் கிணறு, கோட்டூர், நாகலாபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் தார்சாலை அமைத்தல் என்பது உள்பட ரூ.67 லட்சம் மதிப்பில் பல்வேறு பணிகளை நிறைவேற்ற 31 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Dear visitor, you went to website as unregistered user.
We encourage you to Register or Login to website under your name.

Comments:

Add Comments