Set as Homepage|Add to Favorites
 

பல பயனர் செய்தி இயந்திரம்,
சொந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது
இணையத்தில் மீடியா மற்றும் வலைப்பதிவுகள்.

 
Thatstamil.Codewarehouses.com » தமிழகம் » கோபியில் ரகசியமாக மதுபான பார் நடத்திய 2 பேர் கைது 200 மதுபாட்டில்கள் பறிமுதல்
For advertising

கோபியில் ரகசியமாக மதுபான பார் நடத்திய 2 பேர் கைது 200 மதுபாட்டில்கள் பறிமுதல்

Author: nithya at 15-06-2016, 12:58
கோபியில் ரகசியமாக மதுபான பார் நடத்திய 2 பேர் கைது 200 மதுபாட்டில்கள் பறிமுதல்

கோபியில் ரகசியமாக மதுபான பார் நடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து, அங்கிருந்து 200 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தார்கள்.

ஈரோடு மாவட்டம் கோபி மொடச்சூர் ரோட்டில் தனியாருக்கு சொந்தமான ஒரு விடுதி உள்ளது. இந்த விடுதியின் மேல்தளத்தில் அனுமதிபெற்று ஒரு தனியார் மனுபான பார் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் சம்பந்தப்பட்ட விடுதியின் கீழ் தளத்தில் ஒரு மதுபான பார் செயல்படுவதாகவும், அங்கு காலை 8 மணியில் இருந்தே மதுபாட்டிகள் விற்கப்படுவதாகவும், குடிக்க அனுமதிக்கப்படுவதாகவும் கோபி போலீசாருக்கு நேற்றுக்காலை ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து கோபி போலீசார் மாறுவேடத்தில் சம்பந்தப்பட்ட விடுதிக்கு சென்று கண்காணித்தார்கள். அப்போது சிலர் விடுதியில் கீழ் தளத்தில் உள்ள ஒரு அறைக்கு செல்வதும், வருவதுமாக இருந்தார்கள். இதனால் மாறுவேடத்தில் இருந்த போலீசாரும், அந்த அறைக்குள் திடீரென நுழைந்தார்கள்.
மதுபான பாட்டில்கள் பறிமுதல்

அப்போது, அறைக்குள் மதுபானங்களை வைத்து சிலர் குடித்துக்கொண்டு இருந்தார்கள். ஊழியர் ஒருவர் மதுபான பாட்டில்களை விற்பனை செய்துகொண்டு இருந்தார். உடனே அவர்களை சுற்றிவளைக்க மாறுவேடத்தில் இருந்த போலீசார் நெருங்கினார்கள். ஆனால் அதற்குள் அருகே வருபவர்கள் போலீஸ்காரர்கள் என்று தெரிந்துகொண்ட ஊழியர் அங்கிருந்த தப்பி ஓடினார். அதைப்பார்த்து மதுகுடித்து கொண்டு இருந்தவர்களும் தலைதெறிக்க வெளியே ஓடினார்கள்.

உடனே போலீசார் அந்த அறையை சோதனை செய்தார்கள். அப்போது பெட்டி பெட்டியாக மதுபாட்டில்கள் இருந்தன. இதனால் அங்கு ரகசியமாக மதுபான பார் செயல்பட்டது உறுதியானது. இதைத்தொடர்ந்து அங்கிருந்த 200 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து, போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றார்கள்.
2 பேர் கைது

மேலும் இதுகுறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரகசியமாக மதுபான பார் நடத்தியவர்கள் யார்? அங்கு வேலை செய்த ஊழியர் யார்? என்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், விடுதியின் மேல்தளத்தில் இயங்கும் மதுபான பாரில் இருந்து மதுபாட்டில்களை விடுதியின் கீழ்தளத்தில் உள்ள அறைக்கு கொண்டுவந்து. காலை 8 மணி முதலே ரகசியமாக பார் நடத்தி வந்தது தெரிந்தது.

அதைத்தொடர்ந்து போலீசார் மதுபான பார் நடத்திய மேலாளர் டி.என்.பாளையத்தை சேர்ந்த நவநீதகிருஷ்ணன், தப்பி ஓடிய ஊழியர் மேவாணியை சேர்ந்த தங்கராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தார்கள்.
Dear visitor, you went to website as unregistered user.
We encourage you to Register or Login to website under your name.

Comments:

Add Comments