Set as Homepage|Add to Favorites
 

பல பயனர் செய்தி இயந்திரம்,
சொந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது
இணையத்தில் மீடியா மற்றும் வலைப்பதிவுகள்.

 
Thatstamil.Codewarehouses.com » தமிழகம் » அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டி: ஹிலாரி கிளிண்டனுக்கு, ஜெயலலிதா வாழ்த்து
For advertising

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டி: ஹிலாரி கிளிண்டனுக்கு, ஜெயலலிதா வாழ்த்து

Author: nithya at 18-06-2016, 08:43
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டி: ஹிலாரி கிளிண்டனுக்கு, ஜெயலலிதா வாழ்த்து

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள லாரி கிளிண்டனுக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மிகப்பெரிய பெருமை

இதுதொடர்பாக லாரி கிளிண்டனுக்கு, முதல்- அமைச்சர் ஜெயலலிதா நேற்று எழுதிய வாழ்த்துக் கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு, ஜனநாயக கட்சியின் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டு இருப்பதற்காக உங்களுக்கு எனது இதயப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் மிகப்பெரிய கட்சிகளின் சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர்களில் முதல் பெண் வேட்பாளராக நீங்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பது, இந்த உலகின் அனைத்து பெண்களுக்கும், குறிப்பாக ஜனநாயக தேர்தல் அரசியல் முறையில் உள்ள பெண்களுக்கு மிகப்பெரிய பெருமையும், திருப்தியும் அளிப்பதாக உள்ளது.

சென்னையில் சந்தித்தபோது....

இதில் வரலாற்றை உருவாக்கி இருக்கும் நீங்கள், உலகம் முழுவதும் உள்ள பெண்களுக்கு அதிகாரம் வழங்கும் நோக்கத்தில் குரல் கொடுத்து நம்பிக்கையூட்டி இருக்கிறீர்கள். அமெரிக்க வெளியுறவு மந்திரியாக இருந்த போது நீங்கள் கடந்த 2011-ம் ஆண்டு, ஜூலை மாதம் 20-ந் தேதி சென்னைக்கு வந்ததும், சில விஷயங்கள் குறித்து இதயப்பூர்வமாகவும் அன்புடனும் நாம் பேசிக்கொண்ட நிகழ்வு, எனது இனிமையான நினைவுகளில் உள்ளது.

அடுத்தகட்டமாக நீங்கள் மேற்கொள்ள இருக்கும் பிரசாரத்திலும், நவம்பர் மாதம் நடக்க இருக்கும் வாக்குப்பதிவிலும், எனது வாழ்த்து உங்களுடன் இருக்கும். உங்கள் அரசியல் வாழ்க்கை மேலும் உச்சத்தை அடையும் என்பதிலும், உலக அரங்கில் பெண்களுக்கு நீங்கள் ஒரு முன்மாதிரியாக இருப்பது தொடர்ந்து நீடிக்கும் என்பதிலும் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Dear visitor, you went to website as unregistered user.
We encourage you to Register or Login to website under your name.

Comments:

Add Comments