Set as Homepage|Add to Favorites
 

பல பயனர் செய்தி இயந்திரம்,
சொந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது
இணையத்தில் மீடியா மற்றும் வலைப்பதிவுகள்.

 
Thatstamil.Codewarehouses.com » தமிழகம் » என்.எல்.சி. ரகசிய வாக்கெடுப்பு தேர்தல்: சி.ஐ.டி.யு., தொ.மு.ச. தொழிற்சங்கங்கள் அங்கீகாரம் பெற்றன
For advertising

என்.எல்.சி. ரகசிய வாக்கெடுப்பு தேர்தல்: சி.ஐ.டி.யு., தொ.மு.ச. தொழிற்சங்கங்கள் அங்கீகாரம் பெற்றன

Author: nithya at 18-06-2016, 08:50
என்.எல்.சி. ரகசிய வாக்கெடுப்பு தேர்தல்: சி.ஐ.டி.யு., தொ.மு.ச. தொழிற்சங்கங்கள் அங்கீகாரம் பெற்றன

என்.எல்.சி. தொழிற்சங்க அங்கீகாரத்துக்கான ரகசிய வாக்கெடுப்பு தேர்தலில் சி.ஐ.டி.யு., தொ.மு.ச. ஆகிய 2 தொழிற்சங்கங்கள் அங்கீகாரம் பெற்றன.

14 தொழிற்சங்கங்கள்

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் பழுப்பு நிலக்கரி நிறுவனம் (என்.எல்.சி.) இயங்கி வருகிறது. இங்கு 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிரந்தர தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு தொ.மு.ச., அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கம், சி.ஐ.டி.யு, பாட்டாளி தொழிற்சங்கம் உள்பட 14 தொழிற்சங்கங்கள் உள்ளன. இந்த தொழிற்சங்கங்களில் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கம் மட்டுமே என்.எல்.சி. நிர்வாகத்துடன் தொழிலாளர்களின் பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த முடியும். அதன்படி, 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை தொழிற்சங்கங்களுக்கு இடையே தேர்தல் நடத்தி அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம்.

அதன்படி, நேற்று தொழிற்சங்க அங்கீகாரத்துக்கான ரகசிய வாக்கெடுப்பு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் சி.ஐ.டி.யு., அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கம், பி.எம்.எஸ்., பாட்டாளி தொழிற்சங்கம், ஏ.ஐ.டி.யு.சி., தொ.மு.ச. உள்ளிட்ட 6 தொழிற்சங்கங்கள் போட்டியிட்டன. சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்திற்கு எச்.எம்.எஸ்., எல்.எல்.எப்., எம்.எல்.எப், டி.எம்.டி.யு, தொழிலாளர் வாழ்வுரிமை சங்கம், டி.டி.யு.சி. உள்ளிட்ட 6 சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன. அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கத்திற்கு மூவேந்தர் முன்னேற்ற சங்கமும், பிற்படுத்தப்பட்டோர் பேரவையும் ஆதரவு தெரிவித்தன.

ரகசிய வாக்கெடுப்பு

இதையடுத்து, தேர்தலில் போட்டியிடும் தொழிற்சங்கத்தினர், தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், 11 ஆயிரத்து 109 தொழிலாளர்கள் வாக்களிக்கும் ரகசிய வாக்கெடுப்பு தேர்தல் நேற்று காலை 5.30 மணிக்கு தொடங்கி, மாலை 5.30 மணி வரை நடைபெற்றது. இதற்காக 16 இடங்களில் பூத் அமைக்கப்பட்டு, அங்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் மொத்தம் 10 ஆயிரத்து 679 வாக்குகள் பதிவானது. இதன் மூலம் 94 சதவீதம் வாக்குகள் பதிவானது. வாக்குப்பதிவுக்கு பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வட்டம் 9-ல் உள்ள என்.எல்.சி. நடுநிலைப்பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் இரவு 9.30 மணி அளவில் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. இரவு 11.15 மணி அளவில் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

வாக்குகள் விவரம்

தொழிற்சங்கங்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:-

சி.ஐ.டி.யு.-4,828

தொ.மு.ச.- 2,426

அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கம்- 2,035

பாட்டாளி தொழிற்சங்கம்- 1,291

பி.எம்.எஸ்.-87

ஏ.ஐ.டி.யு.சி.-12

சி.ஐ.டி.யு.-தொ.மு.ச. அங்கீகாரம்

ரகசிய வாக்கெடுப்பு தேர்தலில் மொத்தம் பதிவான வாக்குகளில் 51 சதவீதம் வாக்குகள் பெறும் சங்கமே என்.எல்.சி.யால் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கமாக தேர்வு செய்யப்படுவது வழக்கம். ஆனால் நேற்று நடைபெற்ற தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளில் எந்த சங்கமும் 51 சதவீதம் வாக்குகள் பெறவில்லை. எனவே அதிக வாக்குகள் பெற்ற முதல் 2 சங்கங்களான சி.ஐ.டி.யு., தொ.மு.ச. ஆகியவை அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பை தேர்தல் நடத்தும் ஆணையர் ஸ்ரீவத்சவா வெளியிட்டார்.

கடந்த 4 ஆண்டுகளாக என்.எல்.சி. அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கமாக இருந்த அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கம், இந்த தேர்தலில் அதன் அங்கீகாரத்தை இழந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகாரி பேட்டி

தேர்தல் அதிகாரியும், துணை முதன்மை தொழிலாளர் நல ஆணையருமான ஸ்ரீவத்சவா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

‘என்.எல.சி. அங்கீகார தொழிற்சங்க தேர்தலிலின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் படி 51 சதவீத வாக்குகள் பெற்ற தொழிற்சங்கமே அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கமாக அறிவிக்கப்படும். ஆனால் எந்த சங்கமும் 51 சதவீத வாக்குகள் பெறாத நிலையில் அதிக வாக்குகள் பெற்ற முதல் 2 சங்கங்களான சி.ஐ.டி.யு. மற்றும் தொ.மு.ச. சங்கங்கள் பேச்சுவார்த்தைக்கு அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களாக தேர்வு செய்யப்பட்டது குறித்து தொழிலாளர் நலத்துறைக்கு கடிதம் அனுப்ப இருக்கிறேன் என்று அவர் கூறினார்.
Dear visitor, you went to website as unregistered user.
We encourage you to Register or Login to website under your name.

Comments:

Add Comments