Set as Homepage|Add to Favorites
 

பல பயனர் செய்தி இயந்திரம்,
சொந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது
இணையத்தில் மீடியா மற்றும் வலைப்பதிவுகள்.

 
Thatstamil.Codewarehouses.com » தமிழகம் » கட்டாய ஹெல்மெட் உத்தரவை முறையாக அமல்படுத்தாதது ஏன்?: நீதிமன்றம் கேள்வி
For advertising

கட்டாய ஹெல்மெட் உத்தரவை முறையாக அமல்படுத்தாதது ஏன்?: நீதிமன்றம் கேள்வி

Author: nithya at 22-06-2016, 19:06
கட்டாய ஹெல்மெட் உத்தரவை முறையாக அமல்படுத்தாதது ஏன்?: நீதிமன்றம் கேள்வி

கட்டாய ஹெல்மெட் உத்தரவை முறையாக அமல்படுத்தாதது ஏன் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

வழக்கம் போல நீதிமன்ற அலுவல்கள் காலை தொடங்கிய போது தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல்,கட்டாய ஹெல்மெட் உத்தரவை முறையாக அமல்படுத்தாதது ஏன் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியனிடம் கேள்வி எழுப்பினார்.

கட்டாய ஹெல்மெட் உத்தரவு 50 சதவிகிதம் மட்டுமே‌ நடைமுறையில் உள்ளதை தாமே நாள்தோறும் , கண்கூடாக பார்ப்பதாக தெரிவித்த நீதிபதி, உத்தரவு பிறப்பித்து ஒரு வருடம் ஆகின்ற நிலையிலும் அந்த உத்தரவை முழுமையாக அமல்படுத்தாதது ஏன் என வினவினார்.

பள்ளி கல்லூரி மாணவர்கள் கூட ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் செல்வதை கண்டு தாம் வேதனை அடைவதாகவும் நீதிபதி தெரிவித்தார். கட்டாய ஹெல்மெட் உத்தரவு எந்த வகையில் அமலாகியுள்ளது என்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி அவர் உத்தரவிட்டார்.

முன்னதாக கட்டாய ஹெல்மெட் உத்தரவை பிறப்பித்த நீதிபதி‌ கருணாகரன், ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உத்தரவு காற்றில் பறக்க விடப்பட்டதாக கருத்து தெரிவித்திருந்தார்.
Dear visitor, you went to website as unregistered user.
We encourage you to Register or Login to website under your name.

Comments:

Add Comments