Set as Homepage|Add to Favorites
 

பல பயனர் செய்தி இயந்திரம்,
சொந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது
இணையத்தில் மீடியா மற்றும் வலைப்பதிவுகள்.

 
Thatstamil.Codewarehouses.com » தமிழகம் » பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு நடப்பாண்டில் இல்லை: பேரவையில் முன்வடிவு தாக்கல்
For advertising

பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு நடப்பாண்டில் இல்லை: பேரவையில் முன்வடிவு தாக்கல்

Author: nithya at 22-06-2016, 19:18
பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு நடப்பாண்டில் இல்லை: பேரவையில் முன்வடிவு தாக்கல்

உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு நடப்பாண்டில் 50 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கப்படாது என்ற சட்ட முன்வடிவு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அவை கூடியதும் முதல் அலுவல் நடவடிக்கையாக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி, உள்ளாட்சி அமைப்புகள் தொடர்பான 2 சட்ட முன்வடிவுகளை தாக்கல் செய்தார். அதில், உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று கடந்தாண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்தம் நடப்பாண்டில் அமல்படுத்தப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், மாநகராட்சி மேயரை மாமன்ற உறுப்பினர்களே தேர்வு செய்யவும் மற்றொரு சட்ட முன்வடிவில்‌ வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் மீதான விவாதம் நாளை நடைபெறும் எனத் தெரிகிறது. இந்த சட்ட முன்வடிவுகளுக்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
Dear visitor, you went to website as unregistered user.
We encourage you to Register or Login to website under your name.

Comments:

Add Comments