Set as Homepage|Add to Favorites
 

பல பயனர் செய்தி இயந்திரம்,
சொந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது
இணையத்தில் மீடியா மற்றும் வலைப்பதிவுகள்.

 
Thatstamil.Codewarehouses.com » தமிழகம் » கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் கட்டிட மேஸ்திரியின் மனைவிக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள்
For advertising

கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் கட்டிட மேஸ்திரியின் மனைவிக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள்

Author: nithya at 2-06-2016, 18:46
 கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் கட்டிட மேஸ்திரியின் மனைவிக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள்

கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் கட்டிட மேஸ்திரியின் மனைவிக்கு, ஒரே பிரசவத்தில் 2 ஆண், ஒரு பெண் குழந்தை என மூன்று குழந்தைகள் பிறந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் பெல்லாரம்பள்ளி அருகே பாறையூர் கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (27), கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி ஈஸ்வரி (24). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஈஸ்வரிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து பிரசவத்திற்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை யில் ஈஸ்வரியை சேர்த்தனர். அவருக்கு ஸ்கேன் எடுத்து பரிசோதனை செய்த டாக்டர்கள், அவரது வயிற்றில் 3 குழந்தைகள் இருப்பதை கண்டுபிடித்தனர்.

இதை தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தைகளை பிரசவிக்க முடிவு செய்தனர். தொடர்ந்து, ஈஸ்வரிக்கு அறுவை சிகிச்சை மூலம் 2 ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. குழந்தைகள் மூன்றும் எடை குறைவாக இருந்ததால், பச்சிளம் குழந்தைகள் வார்டில் தீவிர சிகிச்சை பிரிவில் இன்குபேட்டரில் வைக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அறுவை சிகிச்சையினை டாக்டர் பாரதி தலைமையிலான மருத்துவ குழுவினர் செய்தனர். ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று குழந்தைகளை, மருத்துவமனையில் உள்ளவர்கள் ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
Dear visitor, you went to website as unregistered user.
We encourage you to Register or Login to website under your name.

Comments:

Add Comments