Set as Homepage|Add to Favorites
 
பல பயனர் செய்தி இயந்திரம்,
சொந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது
இணையத்தில் மீடியா மற்றும் வலைப்பதிவுகள்.

For advertising
Sort news by: Date | Popularity | Attendance | Commentaries | Alphabet

ஜெ. நினைத்தால் சிறையில் வாடும் 7 பேரையும் இப்போதே விடுவிக்கலாம்: ராமதாஸ்

Author: nithya at 1-06-2016, 19:13
ஜெ. நினைத்தால் சிறையில் வாடும் 7 பேரையும் இப்போதே விடுவிக்கலாம்: ராமதாஸ்

சென்னை: 7 தமிழர்களின் விடுதலைக்கு ஒரே வழி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 161-வது பிரிவை பயன்படுத்துவது தான். இதற்கான அதிகாரம் தமிழக அரசுக்கு நிலையில், மத்திய அரசிடம் முறையிடுவது தேவையற்றது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். 7 தமிழர் விடுதலையை வலியுறுத்தி வரும் ஜூன் 11ம் தேதி வேலூர் சிறையிலிருந்து கோட்டை நோக்கி நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச புத்தகம் மற்றும் சீருடைகள்: ஜெயலலிதா வழங்கினார்

Author: nithya at 1-06-2016, 12:32
அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச புத்தகம் மற்றும் சீருடைகள்: ஜெயலலிதா வழங்கினார்

தலைமைச் செயலகத்தில் இன்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா மாணவ-மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள், பாடப்புத்தகங்கள் வழங்கி இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.

திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், அரவக்குறிச்சி 3 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் இடைத்தேர்தல்: தேர்தல் கமிஷன் ஆலோசனை

Author: nithya at 1-06-2016, 11:37
திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், அரவக்குறிச்சி 3 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் இடைத்தேர்தல்: தேர்தல் கமிஷன் ஆலோசனை
அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளும் காலியாக உள்ளதால் அங்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் ஆலோசனை மேற்கொண்டுள்ளது.

மாநிலங்களவை தேர்தல் மனுத்தாக்கல் முடிந்தது: 6 பேர் போட்டியின்றி தேர்வாகின்றனர்

Author: nithya at 1-06-2016, 11:20
மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்றுடன் முடிந்தது. தமிழகத்தில் இருந்து அதிமுக சார்பில் 4 பேர், திமுக சார்பில் 2 பேர் போட்டியின்றி தேர்வாகின்றனர்.நாடு முழுவதும் 57 மாநிலங் களவை உறுப்பினர்களின் பதவிக் காலம் முடிவடைகிறது. இதையடுத்து, இந்த இடங்களுக்கு
புதியவர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூன் 11-ம் தேதி நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

ஜூன் 3-ல் ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் பொதுக்கூட்டம்: கருணாநிதியின் 93-வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட திமுகவினர் ஏற்பாடு

Author: nithya at 1-06-2016, 11:12
 ஜூன் 3-ல் ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் பொதுக்கூட்டம்: கருணாநிதியின் 93-வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட திமுகவினர் ஏற்பாடு

திமுக தலைவர் கருணாநிதியின் 93-வது பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாட அக்கட்சியினர் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி, வரும் 3-ம் தேதி தனது 93-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 2-வது முறையாக ஆட்சி அமைக்கும் வாய்ப்பை திமுக இழந்துள்ளது. ஆனா லும் 89 தொகுதிகளில் வெற்றி பெற்று வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு வலுவான எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது.

காட்டுமன்னார்கோவிலில் மறு வாக்கு எண்ணிக்கைக்கு திருமாவளவன் கோரிக்கை

Author: nithya at 1-06-2016, 10:21

காட்டுமன்னார்கோவிலில் மறு வாக்கு எண்ணிக்கைக்கு திருமாவளவன் கோரிக்கை

காட்டுமன்னார்கோவில் தொகுதி வாக்குகளை எண்ணும்போது குளறுபடி நடந்திருப்பதாகவும் அங்கு மறுவாக்கு எண்ணிக்கையும், ஒரு வாக்குச் சாவடியில் மறுவாக்குப் பதிவும் நடத்த வேண்டுமென்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

570 கோடி ரூபாய் பணம் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்த பிரதமருக்கு தி.மு.க. கோரிக்கை

Author: nithya at 31-05-2016, 18:21
570 கோடி ரூபாய் பணம் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்த பிரதமருக்கு தி.மு.க. கோரிக்கை

தமிழக சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் மூன்று சரக்கு வாகனங்களில் பிடிபட்ட 570 கோடி ரூபாய் பணம் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டுமென பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர், ரிசர்வ் வங்கி ஆளுனர் ஆகியோருக்கு தி.மு.க. கோரிக்கை விடுத்துள்ளது.

நீர் பிடிப்பு பகுதியில் மழை: பவானிசாகர் அணை 37 அடியை தொடுகிறது

Author: nithya at 30-05-2016, 15:43
நீர் பிடிப்பு பகுதியில் மழை: பவானிசாகர் அணை 37 அடியை தொடுகிறது
நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்துள்ளதால் இன்று காலை 8மணி நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 36.64 அடியாக இருந்தது.
மீன்பிடித் தடைக்காலம் நாளை மறுநாள் முடிகிறது - தயார் நிலையில் மீனவர்கள் - நிவாரண உதவித் தொகை உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்துள்ள முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மீனவர்கள் நெஞ்சார்ந்த நன்றி

Author: nithya at 28-05-2016, 21:49
மீன்பிடித் தடைக்காலம் நாளை மறுநாள் முடிகிறது - தயார் நிலையில் மீனவர்கள் - நிவாரண உதவித் தொகை உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்துள்ள முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மீனவர்கள் நெஞ்சார்ந்த நன்றி

தமிழக கிழக்குக் கடற்கரையோர கிராமங்களில், மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்து, நாளை மறுநாள் மீனவர்கள் கடலுக்குச் செல்ல தயாராகி வருகிறார்கள். மீன்பிடித் தடைக்காலத்தில் வலைகளை சீரமைத்தல், படகுகளைப் பராமரித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்ட மீனவர்கள், தங்களுக்கான நிவாரண உதவித் தொகை உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்துள்ள முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொண்டுள்ளனர்.

நீண்ட இழுபறிக்கிடையே புதுச்சேரி மாநில முதலமைச்சராக நாராயணசாமியை அறிவித்தது காங்கிரஸ் மேலிடம் - எதிர்ப்பு தெரிவித்து நமச்சிவாயம் ஆதரவாளர்கள் போராட்டம் - தடியடி

Author: nithya at 28-05-2016, 21:47
நீண்ட இழுபறிக்கிடையே புதுச்சேரி மாநில முதலமைச்சராக நாராயணசாமியை அறிவித்தது காங்கிரஸ் மேலிடம் - எதிர்ப்பு தெரிவித்து நமச்சிவாயம் ஆதரவாளர்கள் போராட்டம் - தடியடி

நீண்ட இழுபறிக்குப் பின்னர் முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமியை புதுச்சேரி முதலமைச்சராக காங்கிரஸ் மேலிடம் அறிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயத்தின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது போலீசார் தடியடி நடத்தியதால் பதற்றம் நிலவியது.