Set as Homepage|Add to Favorites
 

பல பயனர் செய்தி இயந்திரம்,
சொந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது
இணையத்தில் மீடியா மற்றும் வலைப்பதிவுகள்.

 
Thatstamil.Codewarehouses.com » உலகம் » இந்தியாவை அணு வல்லமை நாடுகள் குழுவில் சேர்ப்பதால், அணு ஆயுத போட்டி ஏற்படாது - எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தானுக்கு அமெரிக்கா விளக்கம்
For advertising

இந்தியாவை அணு வல்லமை நாடுகள் குழுவில் சேர்ப்பதால், அணு ஆயுத போட்டி ஏற்படாது - எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தானுக்கு அமெரிக்கா விளக்கம்

Author: nithya at 28-05-2016, 21:35
இந்தியாவை அணு வல்லமை நாடுகள் குழுவில் சேர்ப்பதால், அணு ஆயுத போட்டி ஏற்படாது - எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தானுக்கு அமெரிக்கா விளக்கம்

அணு வல்லமை நாடுகள் குழுவில் இந்தியாவை சேர்ப்பதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த நடவடிக்கையால் அணு ஆயுத போட்டி அதிகரிக்காது என அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது. மேலும், அணு சக்தியை மக்கள் நலனுக்கு பயன்படுத்துவதன் அடிப்படையிலேயே இந்தியாவுக்கு இக்குழுவில் இடம் அளிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

N.S.G. எனப்படும் அணு வல்லமை நாடுகள் குழுவில் இந்தியா சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கு பாகிஸ்தான் கடும் ஆட்சேபம் தெரிவித்து வருகிறது. இந்தியா இத்தகுதியை பெற்றால் இப்பிராந்தியத்தில் அணு ஆயுத போட்டி அதிகரித்துவிடும் என்று பாகிஸ்தான் அச்சம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் திரு. மார்க் டோனர், வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாகிஸ்தானின் இந்த கருத்தை திட்டவட்டமாக மறுத்துள்ளார். அணு சக்தியை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் நாடு என்ற அடிப்படையில்தான் இந்தியா இந்த குழுவில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும், இதனால், அணு ஆயுதப் போட்டி அதிகரிக்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். பாகிஸ்தான் இக்குழுவில் இடம்பெற விரும்பினாலும், உறுப்பினர்களின் கருத்தொற்றுமை அடிப்படையில் அந்நாட்டுக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் மார்க் டோனர் குறிப்பிட்டார். 48 நாடுகள் இடம்பெற்றுள்ள N.S.G. மாநாடு விரைவில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Dear visitor, you went to website as unregistered user.
We encourage you to Register or Login to website under your name.

Comments:

Add Comments