Set as Homepage|Add to Favorites
 

பல பயனர் செய்தி இயந்திரம்,
சொந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது
இணையத்தில் மீடியா மற்றும் வலைப்பதிவுகள்.

 
Thatstamil.Codewarehouses.com » உலகம் » 91 குழந்தைகள் பாலியல் பலாத்காரம் குற்றவாளிக்கு 22 ஆயுள் தண்னை
For advertising

91 குழந்தைகள் பாலியல் பலாத்காரம் குற்றவாளிக்கு 22 ஆயுள் தண்னை

Author: nithya at 7-06-2016, 12:08
 91 குழந்தைகள் பாலியல் பலாத்காரம் குற்றவாளிக்கு 22 ஆயுள் தண்னை

மலேசிய குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்து, அது தொடர்பான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்ட இங்கிலாந்து ஆசிரியருக்கு 22 ஆயுள் தண்டனை விதிக்கபட்டு உள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்த ரிச்சர் ஹக்லே ( வயது 30) என்பவர், மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள கான்வெண்ட் பள்ளியில் படிக்கும் ஏழை கிறிஸ்துவ குடும்பங்களை சேர்ந்த குழந்தைகளுக்கு ஆங்கில ஆசிரியராக பணியாற்றினார்.

குழந்தைகள் மீதான பாலியல் மனநல கோளாறால் பாதிக்கப்பட்டிருந்த இவர், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பலாத்காரம் செய்து, அதனை புகைப்படம் எடுத்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

இவர் 91 குழந்தைகளை தனது பாலியல் இச்சைக்கு பலியாக்கி உள்ளார். தனது கணினியில் சுமார் 20,000 ஆயிரம் ஆபாச புகைப்படங்களை சேகரித்து வைத்துள்ளார்.

இந்நிலையில் கடந்த2014 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மலேசியாவில் இருந்து இங்கிலாந்துக்கு திரும்பிய இவரை கேட்விக் விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

அதன் பின்னர் தீவிர விசாரணை நடத்தினர் 71 குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட இவர், எஞ்சிய குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்ள மறுத்துள்ளார்.

இவர் மீதான வழக்கு இங்கிலாந்தில் உள்ள மத்திய குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றது, இந்நிலையில் நேற்று விசாரணை நடைபெற்றபோது, நீதிபதி பிரைன் ஓ நெய்ல் கூறும் போது

குழந்தைகளின் ஆபாச புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளதால் அவர்களின் எதிர்காலம் பாதிப்புக்குள்ளாகும்.இவர் செய்த குற்றத்திற்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டாலும், அது போதிய தண்டனையாக அமையாது என கூறியுள்ளார், தற்போது இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகி உள்ளது.

71 குற்ற செயல்கள் செய்த ஹக்லேவுக்கு லண்டன் நீதி மன்றம் 22 ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்து உள்ளது.குறைந்தபடம் 25 ஆண்டு காலம் கொடுக்கபட்டு உள்ளது.
Dear visitor, you went to website as unregistered user.
We encourage you to Register or Login to website under your name.

Comments:

Add Comments