Set as Homepage|Add to Favorites
 

பல பயனர் செய்தி இயந்திரம்,
சொந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது
இணையத்தில் மீடியா மற்றும் வலைப்பதிவுகள்.

 
Thatstamil.Codewarehouses.com » உலகம் » 30 ஆண்டுகளில் இல்லாத மழை, வெள்ளம்; சிட்னி நகரில் கடல் சீற்றத்துக்கு 3 பேர் பலி: கடற்கரையோர கட்டிடங்கள் ராட்சத அலையால் இடிந்து விழுந்தன
For advertising

30 ஆண்டுகளில் இல்லாத மழை, வெள்ளம்; சிட்னி நகரில் கடல் சீற்றத்துக்கு 3 பேர் பலி: கடற்கரையோர கட்டிடங்கள் ராட்சத அலையால் இடிந்து விழுந்தன

Author: nithya at 7-06-2016, 12:51
30 ஆண்டுகளில் இல்லாத மழை, வெள்ளம்; சிட்னி நகரில் கடல் சீற்றத்துக்கு 3 பேர் பலி: கடற்கரையோர கட்டிடங்கள் ராட்சத அலையால் இடிந்து விழுந்தன

சிட்னி நகரில் கடந்த ஒரு வாரமாக பலத்த புயலுடன் மழை பெய்து வருகிறது. அப்போது ஏற்பட்ட கடல் சீற்றத்துக்கு 3 பேர் பலியாயினர். மேலும் ஏராளமானோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.

ஆஸ்திரேலியாவின் நியூசவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள சிட்னி நகர கடற்கரையோர பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக புயல் காரணமாக பலத்த மழை பெய்து வருகிறது. அங்கு மணிக்கு 115 கி.மீ. வேகத்தில் காற்று வீசுகிறது. சிட்னி நகரில் ஜூன் மாதம் சராசரியாக 13 மி.மீட்டர் மழை பெய்வது வழக்கம். ஆனால் கடந்த 6 நாட்களில் மட்டும் 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 22 செ.மீட்டர் மழை பெய்து இருக்கிறது.

புயலுடன் பலத்த மழை பெய்து வருவதால் கடல் சீற்றம் ஏற்பட்டு கடற்கரையோர பகுதிகள் நாசமடைந்து வருகின்றன. கடந்த 2 நாட்களில் சிட்னி துறைமுகப்பகுதியில் கடல் அலைகள் சுனாமி போல் 26 அடி உயரத்துக்கு எழும்பி பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.

ராட்சத அலைகளால் கடற்கரையோர பகுதிகளில் மண் அரிக்கப்பட்டு ஏராளமான கட்டிடங்கள் இடிந்து கடலுக்குள் விழுந்தன. கடற்கரை சுற்றுலா மையம் ஒன்றில் இருந்த நீச்சல் குளம் கடல் சீற்றத்தில் அடித்துச் செல்லப்பட்டது. கடற்கரையோரத்தின் தாழ்வான பகுதிகளிலும் வீடுகளிலும் கடல் நீர் புகுந்தது. நியூசவுத் வேல்ஸ் மாகாணத்தில் ஓடும் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனால் கடற்கரை மற்றும் ஆற்றோரங்களில் வசிக்கும் நூற்றுக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். சிட்னி நகரில் தொடர்ந்து புயலுடன் கனத்த மழை பெய்து வருவதால் அந்நகரில் சர்வதேச விமான நிலையத்தின் 3 ஓடுபாதைகள் மூடப்பட்டன.

சிட்னி புறநகர் பகுதியில் லெப்பிங்டன் மற்றும் போவ்ரல் நகரங்களில் கடல் நீர் ஊருக்குள் புகுந்ததில் 2 கார் அடித்துச் செல்லப்பட்டன. அதில் பயணம் செய்த 2 பேரும் பலியாயினர். அவர்களின் உடல்களை நீர்மூழ்கி வீரர்கள் மீட்டனர். இதேபோல் தலைநகர் கான்பெர்ராவில் ஓடும் கோட்டர் ஆற்றில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஒருவர் பிணமாக மீட்கப்பட்டார்.

இந்த நகரங்களில் மேலும் ஏராளமானோர் வெள்ளத்திலும் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களின் கதி என்ன என்று தெரியவில்லை.

புயல் மழை காரணமாக டாஸ்மேனியா, விக்டோரியா மாகாணங்களும் வெள்ளக் காடாகி உள்ளது. அங்கும் தாழ்வான பகுதிகளில் மழை, வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்த மாகாணங்களிலும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. நியூசவுத் வேல்சில் விடாத மழை, வெள்ளத்துக்கு இடையே மீட்பு பணிகளில் போலீசாரும், மாகாண அவசர நிலை படையினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் கூறுகையில், ‘மழை, புயல், கடல் சீற்றம் ஆகிய இந்த மூன்றும் ஒரே நேரத்தில் தாக்கியதால் இந்த மோசமான நிலை ஏற்பட்டு இருக்கிறது’ என்று தெரிவித்தது.

நியூசவுத் வேல்ஸ் மாகாண பிரதமர் மைக் பைர்டு கூறும்போது, ‘‘இந்த புயலால் நிலைமை இன்னும் அபாயகரமாகத்தான் உள்ளது. இதனால் கடற்கரையோர பகுதிகள் அனைத்துமே கடும் சேதம் அடைந்து உள்ளன. இது நம்ப முடியாத ஒன்றாக இருக்கிறது’’ என்று குறிப்பிட்டார்.
Dear visitor, you went to website as unregistered user.
We encourage you to Register or Login to website under your name.

Comments:

Add Comments