Set as Homepage|Add to Favorites
 

பல பயனர் செய்தி இயந்திரம்,
சொந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது
இணையத்தில் மீடியா மற்றும் வலைப்பதிவுகள்.

 
Thatstamil.Codewarehouses.com » உலகம் » துருக்கியில் போலீஸ் வாகனம் மீது வெடிகுண்டு தாக்குதல் 5 பேர் காயம்
For advertising

துருக்கியில் போலீஸ் வாகனம் மீது வெடிகுண்டு தாக்குதல் 5 பேர் காயம்

Author: nithya at 7-06-2016, 13:06
துருக்கியில் போலீஸ் வாகனம் மீது வெடிகுண்டு தாக்குதல் 5 பேர் காயம்

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் போலீஸ் வாகனத்தை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

இஸ்தான்புல் நகரின் மத்தியில் உள்ள வெஸ்னேசிலரில் போலீஸ் பஸ்சை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது என்று மீடியா செய்திகள் வெளியாகி உள்ளது. இச்சம்பவத்தில் 5 பேர் காயம் அடைந்து உள்ளனர். காயம் அடைந்தவர்கள் அப்பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். இச்சம்பவத்திற்கு எந்தஒரு தீவிரவாத இயக்கமும் பொறுப்பு ஏற்கவில்லை. இதற்கு முன்னதாக துருக்கியில் இதுபோன்று நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐ.எஸ். பொறுப்பேற்றது.

இச்சம்பவத்தை அடுத்து இஸ்தான்புல் நகர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது, பிற பகுதிகளிலும் பாதுகாப்பு உஷார் படுத்தப்பட்டு உள்ளது.

இந்த ஆண்டு இஸ்தான்புல் மற்றும் அங்காரா கொடூரமான தாக்குதல்களை எதிர்க்கொண்ட பின்னர் துருக்கி பாதுகாப்பை பலப்படுத்திஉள்ளது. அங்காராவில் நடத்தப்பட்ட இரண்டு தாக்குதல்களுக்கு குர்திஸ்தான் சுதந்திர ஃபால்கோன்ஸ் அமைப்பினர் பொறுப்பேற்றனர்.
Dear visitor, you went to website as unregistered user.
We encourage you to Register or Login to website under your name.

Comments:

Add Comments