Set as Homepage|Add to Favorites
 

பல பயனர் செய்தி இயந்திரம்,
சொந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது
இணையத்தில் மீடியா மற்றும் வலைப்பதிவுகள்.

 
Thatstamil.Codewarehouses.com » உலகம் » விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தனி நாடு கொள்கையை அழிக்க பாடுபடுவேன்: இலங்கை அதிபர் சிறிசேனா பேச்சு
For advertising

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தனி நாடு கொள்கையை அழிக்க பாடுபடுவேன்: இலங்கை அதிபர் சிறிசேனா பேச்சு

Author: nithya at 9-06-2016, 11:32
 விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தனி நாடு கொள்கையை அழிக்க பாடுபடுவேன்: இலங்கை அதிபர் சிறிசேனா பேச்சு

தனிநாடு கோரும் விடுதலைப்புலிகளின் கொள்கையை அழிக்க பாடுபடுவேன் என்று இலங்கை அதிபர் சிறிசேனா தெரிவித்தார். இலங்கை கொழும்பு அருகேயுள்ள தேகிவேலா பகுதியில் நேற்று முன்தினம் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிபர் சிறிசேனா பங்கேற்று பேசினார். அவர் கூறியதாவது: விடுதலை புலிகள் இயக்கத்தின் தனிநாடு கொள்கையை உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் அழிக்க பாடுபடுவேன். இதற்காக நான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டது முதல், உலக தலைவர்களுடன் நட்புறவுடன் பழகி வருகிறேன். நாட்டில் அனைத்து சமூகத்தினரும் அமைதியாக நல்லிணக்கத்துடன் வாழவதற்கு உறுதி அளிக்கிறேன்.

போர் முடிவடைந்து துப்பாக்கியை கீழே போட்டபின்பும் நாம் அமைதியை இழந்து தவிக்கிறோம். தனிநாடு கோரும் விடுதலைப்புலிகளின் கொள்கையை அழிக்க முடியவில்லை. அந்த சித்தாந்தம் அழிக்கப்படவேண்டும். இலங்கையில் பெரும்பான்மையினரான சிங்களர்கள், தமிழர்கள், சிறுபான்மையினர்களாக உள்ள முஸ்லிம்கள் இடையே அமைதி நிலவுவது முக்கியம். இவ்வாறு அவர் பேசினார்.
Dear visitor, you went to website as unregistered user.
We encourage you to Register or Login to website under your name.

Comments:

Add Comments