Set as Homepage|Add to Favorites
 

பல பயனர் செய்தி இயந்திரம்,
சொந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது
இணையத்தில் மீடியா மற்றும் வலைப்பதிவுகள்.

 
Thatstamil.Codewarehouses.com » உலகம் » ஷெல் தாக்குதல் சன்னங்கள் உடலுக்குள் இருந்தால் விசேட சிகிச்சை!- பிரதமர்
For advertising

ஷெல் தாக்குதல் சன்னங்கள் உடலுக்குள் இருந்தால் விசேட சிகிச்சை!- பிரதமர்

Author: nithya at 9-06-2016, 11:51
ஷெல் தாக்குதல் சன்னங்கள் உடலுக்குள் இருந்தால் விசேட சிகிச்சை!- பிரதமர்

யுத்த காலத்தில் இடம்பெற்ற விமானத் தாக்குதல்கள் மற்றும் ஷெல் தாக்குதல்களின் போது சன்னங்கள் உடலுக்குள் சென்றவர்களுக்கு விசேட மருத்துவ சிகிச்சைகளை வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பிரதமரின் கேள்வி நேரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இது தொடர்பில் கேள்வியெழுப்பியிருந்தார்.

விமானத் தாக்குதல்கள் மற்றும் ஷெல் தாக்குதல்களில் காயமடைந்த மாணவர்கள் மற்றும் முதியவர்கள் பலரின் உடல்களில் இன்னமும் சன்னங்களும், அதனுடன் சென்ற இரசாயனப் பதார்த்தங்களும் காணப்படுகின்றன. இவ்வாறானவர்களுக்கு சிகிச்சை அளி்ப்பதற்கு அரசாங்கம் ஏதாவது வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளதா என அவர் கேள்வியெழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு கூறினார்.

இவ்வாறான சம்பவங்கள் குறித்து இதுவரை உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் அரசாங்கத்துக்கு வழங்கப்படவில்லை. இதற்கான தகவல்களை வழங்குமாறும் சிவசக்தி ஆனந்தன் எம்பியிடம் பிரதமர் கோரியிருந்தார்.

இறுதி யுத்த காலத்தில் இரு தரப்புக்கும் இடையில் மாட்டிக்கொண்ட பொது மக்கள் பலர் ஷெல் தாக்குதல்கள் மற்றும் விமானத் தாக்குதல்களுக்கு இலக்காகியிருந்தனர். இதனை எவரும் மறுக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

வடக்கில் உள்ள வைத்தியசாலைகளில் அவர்களுக்கு சிகிச்சையளிக்க முடியும். தேவையேற்ப்படின் கொழும்புக்கு அழைத்துவந்து சிகிச்சையளிப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்ய முடியும்.

அறிக்கை கிடைத்தவுடன் சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடி இவ்வாறான ஏற்பாடுகளை செய்வது பற்றி தீர்மானிக்க முடியும். இது பற்றி ஜனாதிபதிக்குத் தெரியப்படுத்தவும் நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் தெரிவித்தார்.

மேலதிக கேள்வியொன்றை எழுப்பிய சிவசக்தி ஆனந்தன் கூறுகையில், வன்னியில் ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்களின் உடல்களில் இன்னமும் குண்டுகளின் சன்னங்கள் காணப்படுகின்றன.

அண்மையில் வவுனியாவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் சென்னையில் சென்று இந்திய ரூபா 5 லட்சம் செலவுசெய்து உடலிலிருந்த குண்டுகளின் பகுதிகளை அகற்றியுள்ளார். இதற்கு அவருடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உதவியுள்ளனர்.

எனினும், பெற்றோரை இழந்த, பொருளாதார ரீதியான சக்தியற்ற பல மாணவர்கள் உடல்களில் சன்னங்களுடன் இருக்கின்றனர். தேவையேற்படின் வெளிநாட்டுக்கு அனுப்பியாவது அவர்களுக்கு சிகிச்சையளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

இதற்குப் பதிலளித்த அவர், மருத்துவ சிகிச்சைகளை உள்நாட்டில் பெற்றுக் கொடுப்பதற்கோ அல்லது இந்தியா போன்ற நாடுகளிலிருந்து மருத்துவ நிபுணர்களை வரவழைத்து சிகிச்சைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கோ நாம் தயாராகவிருக்கின்றோம். அரசாங்கம் என்ற வகையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவது எமது கடமையாகும் என்றார்.
Dear visitor, you went to website as unregistered user.
We encourage you to Register or Login to website under your name.

Comments:

Add Comments