Set as Homepage|Add to Favorites
 

பல பயனர் செய்தி இயந்திரம்,
சொந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது
இணையத்தில் மீடியா மற்றும் வலைப்பதிவுகள்.

 
Thatstamil.Codewarehouses.com » உலகம் » தலிபான் தலைவன் முல்லா அக்தர் மன்சூரின் இருப்பிடச் சான்றிதழை பறிமுதல் செய்த பாகிஸ்தான்
For advertising

தலிபான் தலைவன் முல்லா அக்தர் மன்சூரின் இருப்பிடச் சான்றிதழை பறிமுதல் செய்த பாகிஸ்தான்

Author: nithya at 3-06-2016, 11:02
தலிபான் தலைவன் முல்லா அக்தர் மன்சூரின் இருப்பிடச் சான்றிதழை பறிமுதல் செய்த பாகிஸ்தான்
அமெரிக்காவின் வான்தாக்குதலில் கொலையுண்ட தலிபான் தலைவன் முல்லா அக்தர் மன்சூரின் இருப்பிடச் சான்றிதழை பாகிஸ்தான் பறிமுதல் செய்துள்ளது.

தலிபான் தலைவன் முல்லா அக்தர் மன்சூர் போலியான பெயரில் இருப்பிடச் சான்றிதழை சட்டவிரோதமாக பெற்று உள்ளான் என்று இன்று அதிகாரிகள் கூறிஉள்ளனர். முன்னதாக முல்லா அக்தர் மன்சூர் பாகிஸ்தான் அடையாள அட்டை வைத்திருந்ததாகவும், முகம்மத் வாலி என்ற பெயரில் போலி பாஸ்போர்ட் கொண்டு உலக நாடுகளுக்கு பயணம் செய்து உள்ளான் என்றும் செய்திகள் வெளியாகியது. இத்தகவல் பாகிஸ்தான் அதிகாரிகளை பெரும் ஆத்திரமடைய செய்தது. இதனையடுத்து விசாரிக்கப்பட்டதில் அவன் பாகிஸ்தானில் இருப்பிடச் சான்றிதழ் பெற்றிருந்தது அம்பலமாகி உள்ளது.

முகம்மத் வாலி என்ற பெயரில் இருப்பிடச் சான்றிதழ் கடந்த 1999-ம் ஆண்டு போலியாக வழங்கப்பட்டு உள்ளது என்று பாகிஸ்தான் புலனாய்வு பிரிவு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இச்சான்றிதழை வைத்திருப்பவர்கள் பாகிஸ்தானில் அரசு வேலையினையும், பிற சலுகைகளையும் பெற முடியும். சான்றிதழில் முகம்மத் வாலி பலுசிஸ்தான் மாகாணத்தை சேர்ந்த கிலா அப்துல்லா மாவட்டத்தில் நிரந்தரமாக குடியிருப்பதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. சான்றிதழில் மாவட்ட துணை கமிஷ்னர் ஹபிஸ் முகமது தாகிர் கையெழுத்திட்டு உள்ளார். முகமது தாகிர் ஏற்கனவே சான்றிதழ் வழங்குவதில் மெத்தனபோக்கில் ஈடுபட்டதாக விசாரிக்கப்படுகிறது. இதுதொடர்பாகவும் பாகிஸ்தான் உளவுப்பிரிவு விசாரித்து வருகிறது.

மன்சூருக்கு தேசிய அடையாள அட்டை மற்றும் பாஸ்போர்ட் வழங்கப்பட்ட விவகாரத்தில் 4 பேரை அதிகாரிகள் கைது செய்து உள்ளனர். பலுசிஸ்தானில் கடந்த 21-ம் தேதி அமெரிக்கா நடத்திய ஏவுகணை தாக்குதலில் முல்லா அக்தர் மன்சூர் உயிரிழந்தான். இதுதொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Dear visitor, you went to website as unregistered user.
We encourage you to Register or Login to website under your name.

Comments:

Add Comments